பக்கம்:பாலைச்செல்வி.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 இ. புலவர் கா. கோவிந்தன் அவ்விளைஞன், ஒரு நாள், மறந்திருந்த அவ்வரசியற் கடமைகளை நினைத்துக் கொண்டான். அரசியல் நினைவு வரப்பெற்ற அவன், தன் காதலையும், தன் காதலியையும் ஒருவாறு மறந்து, பகை நாடுகளை வென்று, அவர் பணிந்து தரும் பொருள் பெற்று வரும் பணியினை மேற்கொள்ள விரும்பினான். தேரைச் செப்பனிடவும், தேரிற் பூட்ட வேண்டிய குதிரைகளைத் தேர்ந்தெடுக்கவும், பன்னாட்களாகப் பயனுறாமல், மாசு படிந்து கிடக்கும் படைக்கலன்களை அம்மாசு போகத் துடைக்கவும் தொடங்கினன். பகற்காலத்தை அப்பணி களிற் கழித்துவிட்டு, இரவு உறங்கச் சென்றவன் சிந்தனை சில நாட்களில் மேற்கொள்ளவிருக்கும் படையெடுப்புக் குறித்த ஆராய்ச்சியில் குழ்ந்து கிடந்தமையால், மனைவி யோடு, அவள் அருகே துயில் கொள்ளுதலை மறந்து, ஒருபால் ஒதுங்கி உறங்கத் தொடங்கினான். ஆனால் உறக்கங் கொண்டானல்லன். படையெடுப்புக் குறித்த சிந்தனை ஒருபாலும், மணந்த நாள் முதலாக, இன்று வரையும், தன்னை ஒரு நாளும் பிரிந்து வாழ்ந்தறியாத தன்வாழ்க்கைத் துணைவி தான் பகைமேற் சென்று மீளும்வரை எவ்வாறு தனித்து வாழ்வளோ? இவளைப் பிரிந்து போய், யான் எவ்வாறு எடுத்த வினையை முடிப்பனோ? பிரிந்தால், பின்னர் மீண்டு வந்து காண எவ்வளவு காலம் ஆகுமோ? என்ற கலக்கம் ஒரு பாலுமாக நின்று வருத்தச், செய்வதறியாது நெட்டுயிர்த்துக் கிடந்தான். பகலில், படைக்கலங்களைத் தேர்ந்து கொண் டிருந்ததையும், இரவில், தான் அண்மையில் இருக்கவும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/134&oldid=822137" இலிருந்து மீள்விக்கப்பட்டது