பக்கம்:பாலைச்செல்வி.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 புலவர் கா. கோவிந்தன் என்பதை யானும் அறிவேன். அவ்வாசை அதற்குப் பணிந்து விடுவதற்கு முன்னரே, அப் பொருளை அடைந்து விடுவேன்' எனக் கூறுவையாயின், அதுவும் இயலாது. சென்றவுடனே சேர்த்துக் கொண்டு வருமாறு, அச் செல்வம், எங்குங் குவிந்து கிடக்கவில்லை. எங்குச் சென்றாலும், எவர் முயன்றாலும், பல நாள் பாடுபட்ட பின்னரே அப் பொருள் கிடைக்கும். ஆகவே, அத்துணை விரைவில் அதைப் பெற்றுத் திரும்பல் இயலாது. அதைப் பெறுகிறவரையிலும், காதலை மறந்து, அக் காதலுக்கு அடிமையாகாது, அதைத் தேடித் திரிதல் அதனினும் இயலாது. ஆதலின், பொருள் கருதிப் பிரிந்து போகும் நீ, அப் பொருள் பெற்றும் வாராய். மாறாக, மீளாப் பழியே பெற்று வருவை. ஆகவே அன்ப! பொருள் கருதிப் பிரிதல், இந்நிலையில் பொருந்தாது. நிற்க. "அன்ப! பொருளிட்டி வாழாதார் வாழ்வும் ஒரு வாழ்வா! வாழ்க்கையை வளமாக்குவது அப் பொருளே யன்றோ? இளமைக்கு இன்பம் ஊட்டுவது பொருள்! காதலைப் பயனுடையதாக்குவது பொருள் எனப் பொருளின் பெருமை பாராட்டுகிறது நின் உள்ளம் என்பதை யான் அறிவேன். அன்ப! பொருள் தேடிப் போகும் கருத்துடையவராய்த் தம் மனையாரைப் பிரிந்து போகும் உங்களைப் போலாது, பொருள் தேடும் கருத்துற்று, ஊரை விட்டகலாது, தம் மனைவியரைப் பிரியாது வாழ்வார் ஊரில் பலர் உள்ளனர். அவர்கள் எல்லோரும் உண்ண உணவற்று உயிரிழந்து போய்விட வில்லை. அவர்களும் வாழ்கிறார்கள். ஆகவே, பொருளே வாழ்வளிப்பது என்பது பொய்யுரையாம்; பொருந்தாக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/144&oldid=822148" இலிருந்து மீள்விக்கப்பட்டது