பக்கம்:பாலைச்செல்வி.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 என் திறம் வினவல் அறிவு ஒழுக்கங்களிற் சிறந்த ஒர் ஆண் மகன், பெண்மைக் குணங்களைப் பெருகக் கொண்ட ஒரு பெண்ணைக் கண்டு காதல் கொண்டான். அவள்பாற் சென்று, 'யான் நின்பால் கொண்டுள்ள அன்பு பிரிவறியாதது; பிரியின் வாழாப் பெருமை வாய்ந்தது!” என்பன போலும் அவள் உள்ளம் உவக்கும் உரைகள் பல கூறினான். அவளும் அவன் அறிவு, ஆண்மை, ஆற்றல் களின் உயர்வைக் கண்டும், "என் அன்பு பிரிவறியாதது!” என அவன் கூறியதை உண்மையெனக் கொண்டும், அவன் காதலை ஏற்றுக் கொண்டாள். சின்னாட்கள் கழித்து, அவர்க்கு மணமும் நிகழ்ந்தது. மணமக்களாக மாறிய அவர்கள் மனையற வாழ்வும் மாட்சிமையுற்று விளங்கிற்று. அவர்கள் வாழ்க்கை, இவ்வாறு, எவரும் போற்ற இனிது நடைபெற்று வருங்கால், ஒரு நாள் அவன் யாதோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/148&oldid=822152" இலிருந்து மீள்விக்கப்பட்டது