பக்கம்:பாலைச்செல்வி.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 நீநற்கு அறிந்தனை! "நல்லினத்தின் ஊங்குந் துணை இல்லை; தீ இனத்தின் அல்லற் படுப்பது உம் இல்” என்பது திருக்குறள். பழந்தமிழ் மக்கள் பண்பாடறிந்தவர். நல்லதன் நலனை யும், தீயதன் தீமையையும் உள்ளவாறு உணர்ந்தவர். நற்பண்புகளையும், அப்பண்புகளைப் பெற்ற நல்லோரை யும் பாராட்டியவர். தீய பண்புகளையும், அவற்றைப் பெற்ற தீயோரையும் பழித்தவர். முன்னையோர் நெறி நின்றவர். பின்னையோர் பின் செல்லாதவர். அதனால், இவர் நல்லோர்; இவரை இனமாக் கொள். இவர் தியோர்; இவர் தொடர்பு ஆகாது என அறிவுறுத்தியவர். இந்நெறி யில், ஒரு தமிழர், தீயோர் சிலரை நமக்குத் தெரியக் காட்டி, அவர்களின் கண்ணிற்கும் தெரியாத தூரத்தே நீங்கிச் சென்று நெறி நிற்பீராக எனக் கூறிய முறையினை எடுத்துக் காட்டுகிறாள் ஒரு பெண்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/182&oldid=822190" இலிருந்து மீள்விக்கப்பட்டது