பக்கம்:பாலைச்செல்வி.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 வந்தனர் திரும்பி! பசுமையும் பல வண்ணமும் உடையவாய்ப் பேரழகு மிக்க மரம், செடி, கொடிகளால் நிறைந்து, பார்க்கப் பேரின்பம் தந்த மாநிலம், பனிப் பருவகாலம் வரவே, செந்நெல் மணியும், சிவந்த கனியும் போலும் வகை வகையான உணவுப் பொருள்களை வையகத்தார்க்கு வழங்கி, அவ்வாறு வழங்கியதன் செயலால், பசுமையும், பன்னிறமும் இழந்து பொன்னிறம் பெற்றுப் பசந்து காட்டிவிட்டு, மீண்டும் இளவேனிற் காலம் வந்தமை கண்டு. இழந்த தன் பண்டைப் பேரழகை மீண்டும் பெற்றது. வளையலிடும் பருவத்தராய இளைய மகளிர் ஒன்றுகூடிச் சென்று, மணல் வீடு கட்டிப் பாவை மணம் செய்து ஆடும் ஆடிடம்போல் தோன்றின. கரைவளர் மாமரத்தின் மலர்களும் வடுக்களும் உதிர்ந்து கிடக்கும். ஆற்றின் கரைக்கண் அமைந்த மணற்பரப்பு, ஐவகை வனப்பும் தோன்ற வாரி முடித்த அப்பெண்களின் தலைமயிரை நினைப்பூட்டுவது போல், ஆற்றின் இடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/209&oldid=822219" இலிருந்து மீள்விக்கப்பட்டது