பக்கம்:பாலைச்செல்வி.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி 225 புகைஎனப் புதல்சூழ்ந்து பூவம்கள் பொதிசெய்யா முகைவெண்பல் நுதிபொர முற்றிய கடும்பனி? 20 எனவாங்கு; - வாளாதி; வயங்கிழாய் ! வருந்துவள் இவள்ளன நாள்வரை நிறுத்துத், தாம் சொல்லிய பொய்யன்றி மீளிவேல் தானையர் புகுதந்தார் . நீள் உயர் கூடல் நெடுங்கொடி எழவே.” 25 வேனிற்காலத் தொடக்கத்தே வருவேன் என்று கூறித் தலைவன் சென்றானாக, முன்பனிக் காலமும் பின்பனிக் காலமும் வருத்த வருந்திய தலைவியைத் தோழி, ஆற்றியிரு என வற்புறுப்பவும், அவள் வருந்தி நின்றக்கால், தலைவியின் ஆற்றாமை உணர்ந்து, பின்பணிக் காலத்தே தலைவன் வந்துவிடத் தோழி மகிழ்ந்து கூறியது. 1. கால்பட்டு - சிறுசிறு கால்வாய்களாகி, கலுழ்தேறி - கலக்கம் தெளிந்து 2 கயம் - குளம் 3. வரித்தல்- கோலம் செய்தல்; வாடு - வாடிய மலர், 4. வீய மலர்தல் அற்றுப்போக, 5. கூர்ந்த - நடுங்கிய, 7. கையாறு - செயலற்றுப் போதல்; 14. ஆர் - நுகர, 5. கழை - கரும்பு, 16. அதிர்பு - நடுங்கி, 18. செம்மல் - வீரத்தால் பிறந்த அழகு;19. பூவம்கள் பொதிசெய்யாமுகைவெண்பல்-இனிய தேன் உள்ளே பெறுதல் அற்ற அரும்பாகிய வெண்பல்; 20. பொரநடுங்க, 22. வாளாதி - வாளா வருந்தாதே, 24 மீளிவேல்தானை - எமனையொத்த வேற்படை வீரர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/228&oldid=822240" இலிருந்து மீள்விக்கப்பட்டது