பக்கம்:பாலைச்செல்வி.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி இ. 227 அன்புடையவன் அவள் கணவன். மேலும் உலகியல் உணர்ந்தவன், ஈகையால் புகழ் பெற்று வாழ்தலே இவ்வுலகப் பயனாம் என்பதறிந்தவன். அவ்வறிவுடைமை யால் தானும், தன் மனைவியும் புகழ்நிறை வாழ்வினராதல் வேண்டும் என விரும்பினான். அதனால், அப்புகழ்பயக்கும் பொருளிட்டி வர எண்ணினான். அதனால், மனைவிமீது கொண்ட அன்பை ஒரு சிறிது மறந்து, அப் பொருள் பெரும்-அளவில் கிடைக்கும் வெளிநாடு சென்றிருந்தான். உருவாலும், உணர்வாலும் ஒத்த இயல்புடையவர் அக் காதலர் ஆதலின், அவனைப் போன்றே, அவன் மனைவியும், பொருளின் பெருந்துணை உணர்ந்து, அது ஈட்டி வரச் செல்லும் அவனைத் தடுத்திலள். அவனைப் பிரிந்து வாழ வேண்டிய பெருந்துயர் மறந்து, அவனுக்கு விடையளித்து அனுப்பினாள். ஆனால், அவன் போனதும், தனிமை அவளைப் பெரிதும் வருத்திற்று. அவ்வாறு வருந்திடுவாளை மேலும் வருத்துமாறு வேனிற் பருவம் வந்துற்றது. - ஒருசில குறுகியும், ஒருசில நீண்டும் இராது, எல்லாம் ஒரு நிகராதற்பொருட்டும், விரைந்து வளர்தற் பொருட்டும் கத்திரியால் கத்தரிக்கப் பெற்றுக், கார் மேகத்தை வெல்லும் கருநிறம் வாய்க்கப் பெற்ற மகளிர் கூந்தல், ஐவகை வனப்பும் விளங்க வாரி முடிக்கப் பெற்றதுபோல், மணல், ஈரம் புலர்ந்து, மாசு தீர்ந்து பரவிக் கிடந்தது; பிடித்து விட்டு நுண்ணிய நெய் போலாக்கிய அக் கருமணல் மேல், மகளிர் கூந்தலில், அணிகளுக்கிடையே இட்டு முடிக்கும் அழகிய பொன்னாரம் போல், பன்னிற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/230&oldid=822243" இலிருந்து மீள்விக்கப்பட்டது