பக்கம்:பாலைச்செல்வி.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைச் செல்வி ஆ 229 வாடிக் கிடப்பாளின் வருத்தத்தைப் போக்கக் கருதாதே, அவ்விளவேனிற் பருவக் காட்சிகளைக் கண்டு, களிமகிழ் கொண்டு, “ஏ, இளவேனிற்காலமே! எம்மை விரும்பும் எம் காதலர்க்கு யாம் இனியராதல் போல், நின்னை விரும்பி நோக்குவார்க்கு, விருந்துாட்டும் வனப்புடையை நீ வாழ்க நின் வனப்பு!” என்று கூறி வாழ்த்தினாள். கணவன் அன்பைப் பெறமாட்டாது கலங்கி நிற்கும் தனக்கு, இன்னல் விளைக்கும் இவ் விளவேனிற் பருவம், இவளுக்கு மட்டும் இன்பமாதல் யாங்ங்னம்? இப்பருவ வரவால் யான் வருந்தி வாட, இவள் மட்டும் களித்துக் கவின் பெறுவது எதனால் எனச் சிந்திக்கத் தொடங்கி னாள் அப் பெண். அவ்வாறு சிந்தித்துக் கிடப்பாளின் அருகிற் சென்ற தோழி, "பெண்ணே! மகிழ்ந்து நிற்கும் என் நிலை கண்டு மருளாதே. அருவி நீர் ஊட்ட வளர்ந்த அழகிய முல்லைக் கொடிகள், மகளிரின் வெண்சிறு பற்களின் வரிசை யொப்ப மலர்ந்த அலரும் பருவத்து அரும்புகளை, நீ நின் கூந்தல் நிறையச் சூட்டிக் கொள்வாயாக! என்று என் காதலிபால் சென்று உரைத்து மீளுக!' என நம் காதலர் கூறிவிட்ட துரது இதோ வந்து நிற்கிறது காண். அவர் விடுத்த இத்துது, பகையொழித்து வெற்றி கொள்ளும் அவர் போல், பிரிவால் நெற்றி பசந்து வருந்தும் நம் நோயை அழித்து, நம் ஆருயிரைக் காக்கும் அருமருந்தாய் அமைந்தது. இவ்வாறு வந்து வாழ்வளித்த இத்தூதை விரும்பி வரவேற்காது வருந்திக் கிடத்தல், விருந்தோம்பி வாழக் கடமைப்பட்டுள கற்புடை மகளிர்க்கு மாண்டாமோ? நம் துயர் ஒழித்து, மகிழ்ந்து முக மலர்ந்து, இன்னுரை வழங்கி, இனியன அளித்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/232&oldid=822245" இலிருந்து மீள்விக்கப்பட்டது