பக்கம்:பாலைச்செல்வி.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 இ. புலவர் கா. கோவிந்தன் எரிஉரு உறழ, இலவம் மலரப், 10 பொரிஉரு உறழப் புன்குபூ உதிரப் புதுமலர்க் கோங்கம் பொன்னெனத் தாதுாழ்ப்பத் தமியார்ப் புறத்துஎறிந்து எள்ளி முனியவந்து, ஆர்ப்பது போலும் பொழுது: எண்ணி அந்நலம் போர்ப்பது போலும் பசப்பு; 15 நொந்து நகுவனபோல் நந்தின.கொம்பு, நைந்துள்ளி உகுவது போலும்என் நெஞ்சு:எள்ளித் தொகுபு உடன் ஆடுவ போலும் மயில்; கையில் உகுவன போலும், வளை, எண்கண்போல் இகுபு, அறல்வாரும் பருவத்தும் வாரார்; 20 மிகுவது போலும் இந்நோய்; நரம்பின் தீங்குரல் நிறுக்கும் குழல்போல் இரங்கினர் மிஞறொடு தும்பிதாது ஊதத், தூதுஅவர் விடாராய்த் துறப்பார்கொல்? நோதக இருங்குயில் ஆலும்.அரோ! 25 எனவாங்கு புரிந்துநீ, எள்ளும் குயிலையும் அவரையும் புலவாதி; நீலிதழ் உண்கண்ணாய்! நெறிகூந்தல் பிணிவிட, நாள்வரை நிறுத்துத்தாம் சொல்லிய பொய்யன்றி மாலைதாழ் வியன் மார்பர் துணைதந்தார்; - 30 கால்உறழ் கடுந்திண்தேர் கடவினர் விரைந்தே.” வேனிற் பருவ வருகை கண்டு ஆற்றாது வருந்திய தலைவியைத் தோழி, தலைவன் வரவுணர்த்தி ஆற்றியது. 1. வீறுசால் - பிறவற்றிற்கில்லாத பெருமை பொருந்திய, ஞாலம்-உலகம்:2. நந்தி- நிறைந்து, 3. மணி - பளிங்கு, புரை - ஒக்கும்; வயங்கல் - கண்ணாடி, துப்பு - பவளம், 4. பிணிவிடும் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/239&oldid=822252" இலிருந்து மீள்விக்கப்பட்டது