பக்கம்:பாலைப்புறா.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞாநியின் பார்வையில் சு.சமுத்திரம்

தமிழில் பல வகைப்பட்ட எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். பொதுவாக ஒவ்வொரு வகை, எழுத்தாளரும், தமக்கென்று வகுத்துக் கொண்டபாணியிலிருந்து மாறி எழுதுவது, அபூர்வமானது. அப்படியே தங்கள் எழுத்து பாணியை மாற்றிக் கொண்டாலும் பழைய வகைக்குத் திரும்பிச் செல்வது இல்லை. நானும் எழுதுகிறவன்; என்றாலும், அடிப்படையில், நான் ஒரு வாசகனென்கிற விதத்தில், எனக்குப் பலவகைப்பட்ட எழுத்தாளர்களின் எழுத்துக்களைப்பிடிக்கும். எனக்குப் பிடித்த பல எழுத்துக்களின் சொந்தக்காரர்களான அந்த எழுத்தாளர்களில் பலருக்கும் ஒருவருக்கு மற்றவரின் பாணி எழுத்துக்களைப் பிடிக்காது என்பதை யும் நான் அறிவேன்.

ஆனால், வாசகன் என்ற விதத்தில் எனக்கு, பல தரப்பட்ட கதைகளையும் படிக்கப் பிடிக்கும். புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, தி.ஜானகிராமன், ஆதவன், சம்பத், இந்திரா பார்த்தசாரதி, அம்பை, சூடாமணி, காவேரி, இந்துமதி, வாசந்தி, வண்ணநிலவன், வண்ணதாசன், பிரபஞ் சன், ஜெயந்தன், சா.கந்தசாமி, விட்டல்ராவ், கி.ராஜநாராயணன், விமலாதித்த மாமல்லன் ம்ேலாண்மை பொன்னுச்சாமி, தமிழ்ச்செல்வன், ராஜேந்திரசோழன், ஜெயமோகன் பாஸ்கர் சக்தி, கல்கி, தேவன், சுஜாதா, தாமரைமணாளன், கிருஷ்ணா, பி.வி.ஆர்., ரா.கி.ரங்கராஜன், பாக்கியம் ராமசாமி, புனிதன், சாவி, என்று பல எழுத்தாளர்களின் பல கதைகள் எனக்குப்பிடித்தமானவையாக இருந்து வந்திருக்கின்றன. சமுத்திரமும் அவர்களில் ஒருவர். இவர்கள் அத்தனை பேரும் பல விதங்களில் தமக்குள் மாறுபட்டவர்களானபோதும், இவர்களிடம் எனக்குக் கிடைத்த ஒவ்வொரு பிடித்தமான கதையும். ஏதோ ஒரு விதத்தில் வாழ்க்கை பற்றிய என் புரிதலை இன்னும் சற்று செழுமைப்படுத்திக் கொள்ள எனக்கு உதவியிருக்கினறன என்பது மட்டுமே, எனக்கு, இங்கு குறிப்பிட முக்கியமான விஷயம். மற்றவர்களைப் போலவே, சமுத்திரத்திடமும், எனக்குப் பிடித்த கதைகள் கிடைத்தது போல, எனக்கு ரசிக்க முடியாத கதைகளும் கிடைத்தது உண்டு. என் ரசனையும் தேர்வும், எனக்கே பிரத்யேகமானவை. சமயங்களில்,

iv

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைப்புறா.pdf/6&oldid=635839" இலிருந்து மீள்விக்கப்பட்டது