பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 1.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 79 109 இந்திவெறி ஆளுநரை அகற்றியது! வரும்பயனை நினையாமல், வந்தபயன் கருதாமல், வல்லார் வாய்ச்சொல் தரும்பொருளை ஒராமல், பிறங்கடையை உன்னாமல் தகவில் லாமல், பெரும்பிழையை எந்தமிழர் செய்திட்டார்; அரசியலில் பிழைசெய் திட்டார்! அரும்புதுமை ஒன்றுண்மை! இந்திவெறி ஆளுநரைஅகற்றிற் றிங்கே! - 1971 இந்தியை மாற்றுக! சிறையுட் புகுத்தியும், சிற்றுயிர் வெளவியும் செந்தமிழ்ச்சீர் மறையப் புகுத்திய இந்தியை மாற்றுக! மாற்றிலிரேல், குறையக் கிடத்திய கொம்பொடு போகாக் குவட் டெருமைக்(கு) உறையுட் புகுத்திய வாளை உருவுதற் கோர் நொடியே! - 1971