பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 1.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(முதல் தொகுதி) உள்ளே... மண்ணைப் படுத்தினர் அடிமை! தமிழின் மாந்தரைத் தடுத்தனர் உயர்வில் . நம் கண்ணைக் கெடுத்தனர் எனினும் உய்வோம்; கருத்தைக் கெடுத்தனர் அடடா! பழந்தமிழ் நாட்டில் பைந்தமிழ் மொழியில் படிப்பதுதானே முறை ? இழந்தநன் உரிமை எய்திடத் த்டுக்கும் இழிஞரின் செவிபட அறை: நெஞ்சில் தமிழ் நினைவு, நீங்காத மெய்யுணர்வு; செஞ்சொல் குமிழியிடும் சிதையாத பாட்டுயிர்ப்பு துஞ்சா இரு விழிகள்: தொய்ந்து விழா நற்றோள்கள்; அஞ்சுதல் இன்றி அயர்வின்றி நின்றவுரம், எஞ்சுகின்ற காலமெலாம் ஏற்ற நறுந்தொண்டு; நஞ்சு மனங் கொண்டார் நடுக்கமுறுஞ் செந்துணிவு, கொஞ்சமிலை, நல்லிளைஞர் கூட்டமோ கோடி பெறும்! விஞ்சுகின்ற செந்தமிழே, வெற்றிக்கென் வேண்டுவதே ? எப்படியேனும் இத் தமிழகத்தை முப்படி உயர்த்திடல் வேண்டும் . என் முச்சதற் குதவிடல் வேண்டும்! தமிழே எனக்கிங் குயிர்மலர்ச்சி . செந் தமிழே எனக்கிங் குடலம்! . தமிழே எனக்கிங் குள்ளுணர்வு , பைந் தமிழே எனக்கிங் குலகம்!,