பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 1.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணிச்சாறு முதல் தொகுதி உளமறிந்து வந்தவளை உவந்துவர வேற்றேன்; உணர்வளித்து நான்வளர இலக்கியப்பால் ஊட்டி வளமையுற உயிருவக்கும் மெய்யுணர்வைக் கீண்டு வயங்குதமிழ்த் தேன்பிழிந்தே எனைச்சுவைக்க வைத்தாள்! அளவகன்ற தவள்பெருமை அத்துணைக்கும் வேட்கை; ஆயினும்என் செய்குவன்யான்? வளர்ச்சியுறாப் பிள்ளை பிளவுபடாத் தொடர்புகொள வேண்டுகிறேன் யாண்டும்; பிணி, உறக்கம், சாவு, ஒடுக்கம் இவற்றினுக்கென் (செய்வேன்? - 1954 தமிழ்த் தலைவர்க்கு! தமிழ்த் தலைமை தாங்குவரே, தண்டமிழ்க்குத் தணிப்பறியாக் கொடுமை செய்தே அமிழ்பகைவர் தம்பாலே தகுபொருளைத் தண்டுகின்றார், அவர்க்குச் சொல்வோம்! தமிழ்க்குலத்தீர்! தமிழ்குலைத்தீர்; தமிழ்ப்பண்பு தனைவிட்டீர், உங்கள் வாழ்வும் தமிழ்த்தாயின் வாழ்வன்றோ? அந்நன்றி தனக்கேனும் தமிழ்காப் பீரே! - 1950