பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 1.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 25 இஃதெல்லாம் எண்ணில் இமைமூட மாட்டுதில்லை! எஃகுடலும் கூனியே ஈரடியாய் நாணின்றால்! ஆன்ற தமிழ்மறவீர் ஆதலினால் கூவுகின்றேன். ஊன்றீர் தமிழ்க்கொடியை! ஊரைத் திரட்டுவமே! உண்ணில் தமிழ்த்தாய் உயர்கொடிக்கீழ் இந்நாட்டு மண்ணில் விளைந்த விளைவுண்போம்! மானம்போய்ச் செத்தழிந்து போமுன்னே சீர்விளங்கப் பேர்விளங்க முத்தமிழைக் காப்போம் முனைந்து: - 1959 முத்தமிழ்! ஈடறவே நெஞ்சில் இனித்த தமிழ்மொழியைக் கேடறவே காத்துக் கெடுப்பார் தமைக்கெடுத்துப் பூடறவே வெட்டப் புறப்பட்டே னென்றவர்முன் பீடுறவே பைங்கிளியே பேசு! - - பாட்டுக்குள் நச்சைப் பயிற்றி இசைத்தமிழைக் கேட்டுக்குள் ளாக்கும் கெடுமனத்தைத் தான்புதைக்கக் கூட்டுக்குள் ஆவி கொடுப்பேனென் றன்னவர்முன் கோட்டுக் குயிலே, நீ கூவு! பூத்த கலைகள் பொலிந்ததமிழ் நாட்டரங்கில் கூத்துக் கலையாங் குரங்காட்டம் காட்டுவர்க்கே ஏத்துந் தமிழ்க்கூத் திளமயிலே, எந்தமிழைக் காத்த நடமாடிக் காட்டு! - 1959