பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 1.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 64 தமிழ்மொழி வாழ்க! எப்படியேனும் இத் தமிழகத்தை முப்படி உயர்த்திடல் வேண்டும் - என் மூச்சதற் குதவிடல் வேண்டும்! முப்படி நிலையில் முதற்படி தமிழ்ப்படி! முறைப்படி அதன்நலம் வேண்டும்! - முழு முயற்சியும் அதற்கிடல் வேண்டும்! தமிழ்ப்படி யேறின் தமிழினம் ஏறும்! தாழ்நிலை இழிவுகள் மாறும்! - நம் தலைவிலை எனின் - தரல் வேண்டும்! தமிழின உரிமையே தமிழ்நில உரிமை தருமெனில் மறுப்புரை உண்டோ? - இத் தலைமுறைக் (கு உழைப்(பு) - அது வன்றோ? தமிழ்மொழி வாழ்க! தமிழ்மொழி வாழ்க! தமிழ்மொழி வாழ்க - வென் றுரைப்போம்! - அதால் தமிழினம் மலர்க -வென் றழைப்போம்! தமிழினம் வாழ்க! தமிழினம் வாழ்க! தமிழினம் வாழ்க - வென் றுரைப்போம்! - அதால் தமிழ்நிலம் தழைக்க -வென் றுழைப்போம்! எப்படி யேனும் இத்தமி ழகத்தை முப்படி உயர்த்திடல் வேண்டும்! - என் மூச்சதற் குதவிடல் வேண்டும்! - 1975