பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணிச்சாறு இரண்டாம் தொகுதி

வாழ்வியல் கூறுகள் இதில் சொல்லப் பெறுகின்றன. அறிவுநிலை விளக்கங்கள், உரிமை உணர்வுகள், மாந்த நிலை உயிரெழுச்சிக் கூறுகள், உள்ளுணர்வெழுப்பும் மெய்யறிவு நிலைகள், மொழியியல், இனவியல், நாட்டியல் புரட்சிக்கு வித்துன்றும் அடிப்படை வரலாறுகள் முதலியன இப்பிழிவில் கலந்திருப்பதை நீங்கள் சுவைத்து உணரலாம்.

கனியைப் பிழிந்திட்ட சாறு - எம் கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு! என்றும்,

கணிச்சாறு போல்பல நூலெல்லாம் கண்டு காத்ததும் அளித்ததும் தமிழ்செய்த தொண்டு! என்றும் பாவேந்தர் பாரதிதாசன் தமிழையும் தமிழ்ப் பனுவலின் இனிமையுைம் உணர்த்தக் கணிச்சாற்றை உவமை பேசுவார். - - -

எனவே தமிழும் தமிழுணர்வும் செறிந்து விளங்கும் இப்பாடல் தொகுதிக்குக் கனிச்சாறு என்று பெயர் தரப்பெற்றது. -

மிக அரும்பாடுபட்டு இத்தொகுதித் தொடர்கள் வெளியிடப் பெறுகின்றன.

தமிழினம் தன் நிலைப்பாட்டு மேன்மைக்கு இத் தொகுதிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாக. -

சென்னை-5 அன்பன்,

14–4–1979

N