பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

கணிச்சாறு இரண்டாம் தொகுதி

நாடகம் நடித்துத் தீயரால் அமைத்த பீடறு ஆட்சியில் பிழைகளே மலிந்தன!

கற்றவர் ஆய்வுரை காற்றில் பறந்தது! # 00 முற்றக் கற்ற முழுமாந் தர்போல் அமைச்சரின் உளறல் சட்டம் ஆனது! நமைச்சல் கொண்டவன் நள்ளிராப் பகலெனச் சொறிதல் போலும் உரைகள் சொரிந்தன. நெறிமுறை பிறழ்ந்தது. நேர்மை மாய்ந்தது! ஆட்சித் திறத்தால் மக்களைத் திருத்தும் மாட்சி யின்றிப் பண்பை மாய்த்தனர் வாணிகர் கள்ள வாணிகம் பேணினர்; துணிகர் வாழ்க்கை துரும்பாய் இளைத்தது. சமயப் புரட்டுகள், 'சாதிச் செருக்குகள், 1 iO சுமை சுமையாய்நம் தோள்களை அழுத்தின! கல்விச் சுனையை எருமைகள் கலக்கின : செல்வ முதலைகள் வறியரை விழுங்கின! மருத்துவ மனைகளைக் கருத்தடை ஆண்டது! திருத்தமில் உரைகள் தெருத்தொறும் ஒலித்தன! கலையென் பெயரால் கயமை வளர்ந்தது! விலைமகள் என்னும் பெயரை விலக்கிக் கலைமகள் எனும்பெயர் கணிகையர் பூண்டனர்! நாடகக் கொட்டகை பீடகம் குறைந்தே ஏடகப் பள்ளிகள் தம்மை வென்றன ! 120 கோவலர் போலும் கோல்கைக் கொண்ட காவலர் என்பரால் காவல் அழிந்தது! அறநூல் எல்லாம் அறைநூல் ஆயின! மறநூல் ஒன்றே மதிக்கப் பெற்றது! புத்திலக் கில்லா மக்கள் புரைந்ததால் பத்திலக் கங்கள் ஆட்சியைப் பற்றின.

செய்தித் தாள்களோ பொய்த்துத் தள்ளின. உய்தி யின்றி மக்கள் உலைந்தனர்.