பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68.

கணிச்சாறு இரண்டாம் தொகுதி

இழிநடை போடும் இத்தகு நாட்டின் பழிமிகு வாழ்க்கைப் பாதையை மாற்றி உயர்வுறு நெறியை உள்ளுவர் உள்ளம் மயர்வுறு காட்சி காண்ட தாகலின் அத்தகு நினைவிற் காற்றல் மிகுதி! - எத்தகு விளைவையும் இவர்மனம் விளைக்கும்! வேரிலா வாழ்க்கை வினையிலா ஆட்சி! நேரிலாக் கொள்கை நிலையிலாப் போக்கு! உரிமைகொல் சட்டம்; உலைவிலாத் துன்பம்! நரிகளின் சூழ்வால் நாய்களும் ஆளும் - 170 கோணல் அரசியல் வாழ்க்கையே விரைவில் மாணப் புரட்சியை விளைக்க வல்லது! உரிமை யிறந்த வாழ்க்கையை ஒருசிலர் பெரிதென் றுவப்பினும் சான்றவர் பேனார்!

தமிழ்மொழி தனித்தது; இனித்தது; தாழ்விலாத் தமிழ்ப்பண் பாடும் தனித்தது; சிறந்தது! தமிழ்மொழி சிறப்பின் தமிழ்த்திறம் சிறக்கும்! தமிழ்த்திறம் சிறப்பின் தமிழகம் பிரியும்! உறுதி யிவ்வுரை உறுதியிக் கொள்கை! உறுதி யன்றெனின் உண்மை யன்றெனின் 180 இனிவருந் தமிழகம் என்முகத் துமிழ்க! இனிவருந் தமிழர் என்பெயர் மறக்க! இன்றிலை, நாளையும் இல்லையென் றேகினும் என்றா கிலும்எந் தமிழகம் தனியே பிரிந்திடல் உண்மை பிரிந்திடல் உண்மை! உரிமை பெற்றே உயர்வதும் உண்மை!

அற்றை நாள் நினைந்தே நடையிடுகின்றேன்! இற்றை நாள் நாமிடும் வித்தே இனிவரும் வளஞ்சேர் தமிழகம் வளரச் செய்வது! மணஞ்சேர் தமிழகம் மலரச் செய்வது! 190 உள்ளத் தனல்பெற இதனை உரைப்பேன்!

கொள்ளத் தகுவார் இவ்வுரை கொள்க! எள்ளி யுரைப்பார் எள்ளுக! எங்கோள்