பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

76

பாரதிதாசனுக்குப் பா மடல்!

அன்புள்ள பாவேந்தே! வணக்கம். இங்கே அனைவருமே நலமெனினும், ஐயா, நீங்கள் தென்புதுவைத் திருமண்ணை - தமிழகத்தைத் தீந்தமிழர் தமைப் பிரிந்த நாளி னின்று தென்பில்லை உளத்தினிலே! ஊக்க மில்லை; திருவளர்ந்த தமிழகத்தில் செழிப்பு மில்லை; அன்பில்லை தமிழர்க்குள்; ஆர்வ மில்லை; அனைத்துலக வாழ்க்கையிலும் அமைதி இல்லை! f

முன்பிருந்த நிலையறிவீர்; தமிழர் அன்றே மூளிகளாய் நின்றதுவும் தெரிந்தி ருப்பீர்; என்பிருந்த தோல் உருவாய்ச் சதை, நார் இன்றி எள்ளளவும் மானமின்றிச் சுரணைஇன்றித் தன்பிறந்த நாடு, மொழி, மக்கள் என்ற தன்னுணர்வு சிறிதுமின்றித் தமிழர்வாழும் துன்பிருந்த சூழ்நிலையை அறிந்தி ருப்பீர்! துளியேதும் மாற்றமில்லை; நிலைஅவ் வாறே! 2

சோற்றுக்கு மடிவிரிக்கும் புலவர் கூட்டம்! சுரண்டுகின்ற வாணிகர்கள்! அடிக்கும் மென்மைக் காற்றுக்கும் தாங்காத குடில்வாழ் மக்கள்! கண்ணிர்க்குப் பஞ்சமில்லை; பழம் விளக்கு

மாற்றுக்குக் குஞ்சமெனப் பதவி, பட்டம்

பகற்கொள்ளை ! கலைக்கொலைகள்! பெருகும் மக்கட் பேற்றுக்குக் குறைவில்லை; சவலை, நோஞ்சற் பிள்ளைகளோ கணக்கில்லை! உணவுப் பஞ்சம்! 3

உண்மைக்கு மதிப்பில்லை; பொய்யு ரைக்கும் உலுத்தஅர சியல்வாழ்க்கை; நீங்கள் மெச்சும் பெண்மைக்குச் சிறப்பில்லை; பிறழ்ந்த தாண்மை! பேயாக அலைந்துபனந் திரட்டும் கீழ்மை!

திண்மையில்லை உள்ளத்தில்! தொண்டிங் கில்லை;

திறமுமில்லை; கல்வியிலும் ஆழ மில்லை. அண்மையிலே அமைச்சரவை மாறிற் றிங்கே! அதன் விளைவை அடிக்கடிநான் அறிவிக் கின்றேன். 4