பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் பதிப்பு - சிறப்பு முன்னுரை

கனிச்சாறு-முதல் தொகுதி இது. இதில் தமிழ், இந்தி எதிர்ப்பு, இன எழுச்சி பற்றிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

சில பாடல்கள் பகுப்பு மாறியும் சேர்க்கப் பெற்றிருக்கலாம். விரைந்து அச்சேறியதால் ஏற்பட்ட விளைவு இது. ஒவ்வொரு தொகுதியிலும் பாடல் விளக்கக் குறிப்புகள் என்று ஒரு பகுதியும் சேர்க்கப் பெற்றுள்ளது. புதிய முறை இது. பாடல்கள் சில விடுபட்டுள்ளன. அவை அடுத்த பதிப்பில் சேர்க்கப்பெறும். -

இத்தொகுப்பு வரிசையில் தென்மொழி முதல் இதழிலிருந்து சுவடி 14 ஒலை 12 முடியவும், தமிழ்ச்சிட்டு முதல் இதழிலிருந்து குரல் 9 இசை 12 வரை வெளிவந்த பாடல்களுள், பள்ளிப் பறவைகள் முதல் தொகுப்பில் சேர்க்கப்பெற்றன. தவிர, பெரியோர்களுக்கானவும், பிற தமிழ் வெளியீடுகளான பகுத்தறிவு, தென்றல், முல்லை, வானம்பாடி, தமிழ்நாடு, செந்தமிழ்ச்செல்வி, விடுதலை, உரிமை முழக்கம், தேனமுதம், சனநாயகம், குயில் முதலியவற்றுள் வந்தனவும் ஒரு சேரத் தொகுத்துச் சேர்க்கப் பெற்றுள்ளன.

இத் தொகுப்புகளில் உள்ள பழம்பாடல்கள் சில தனித்தமிழ்ப்படுத்தப் பெற்றுள்ளன. சில ஆங்காங்குத் திருத்தம் பெற்றுள்ளன.

என் நெடும் பாடல் நூல்கள் சில தனியாக முன்பே வெளியிடப் பெற்றிருந்தும், தனிச் சிறுபாடல்கள் அனைத்தும் சேர்த்துத் தொகுதிகளாக வெளியிடப் பெறாமலிருந்தமைக்குக் கரணியம் பொருள் முட்டுப்பாடே

--கக