பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

கணிச்சாறு இரண்டாம் தொகுதி

பொய்யெடுத்துப் புளுகலென்னும் சீழ்க்குழம்பில் தோய்த்துப்

புராணமெனும் பேரெழுதிப், பிரமனெனும் பார்ப்பான் செய்தெடுத்துப் போட்டவன், நீ செத்தவுடன் நேராய்ச் சிவவுலகம் போகுவன், நீ; செய்தவினை தீரக் கையெடுத்துக் கும்பி'டென்றோர் கல்லெடுத்து நட்டுக் கருவறைசூழ் சுவரெடுத்துக் கோயில் என்று சொல்லி மெய்யெடுத்துக் கூறிடுவான் போல், பார்ப்பான் கூறி, மேலுலகக் காவலன்போல் மேலமர்ந்து கொண்டான் 5

& 4

மேலமர்ந்து கொண்டவனின் மேற்பூச்சும் நூலும் மேய்தவளைக் கூச்சலதும், தமிழினத்தை வீழ்த்திக் காலமரக் கைய்மரச் செய்தனகாண் இக்கால் கருத்தெழுந்து பெரும்புரட்சி செய்ததுகாண் செய்தே வேலமர்ந்த தோளினராய், விறலமர்ந்த கையுள் விசையமர்ந்து விட்டதனால், விரகமர்ந்த பார்ப்பான் தோலமர்ந்த என்பினனாய்ந் தொடைநடுங்கிப் போனான்! தொகைதொகையாய் எந்தமிழர்

தோள்கள்ளழக் கண்டான்! . 6

குலங்களெலாம் மதங்களெலாங் குப்பைக்கா டென்றும் கூட்டிவைத்த நூல்களெலாம் அடிமைவிர கென்றும், கலங்கலுற்ற தமிழ்ன்மனத் தெளித்துணர லானான்! கவணுருவுங் கற்களென விரைத்துவர லானான்:

நிலங்குமுறும்; நீர்குமுறும்; வான்குமுறும் அன்றோ?

நீளடிமைத் துயில்களைந்தால் உலகதிரும் அன்றோ? புலங்குவிந்த சாதிமதம் பொடிந்துபுகை யாகும்! பூண்தெறித்து வானிடையில் மின்னலிடி தோன்றும்! 7

குடுமியெலாந் தீப்பறக்கும் நூல்கழுத்தைச் சுற்றும் ! குந்தாணித் தொந்தியெல்லாங் கலக்கமுற்றுச் சாயும்! கொடுமைவினை வேதமொடு மது நூற்கள் எல்லாம் கொழுந்துவிட்டுப் பாய்ந்தெரியும் -

புராணங்கள், வேகும்: :