பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71

வாழ்க தமிழர்கள்! வாழ்க தலைவர்கள்!!

ஏழு கோடித் தமிழர்கள் இருந்தால் ஏழு கோடி நினைவுகள் இருக்கும்! ஏழு கோடி நினைவுகள் எழுந்தால் எண்பது கோடிப் போக்குகள் தோன்றும் ! வாழும் வகைகளும் ஆளுக் கொன்று; தாழும் நிலைகளும் நாளுக் கொன்று! ஏற்றம் என்பது கட்சிஎண் ணிக்கை! மாற்றம் என்பது மனநிலைத் திரிபுகள்!

அனைத்துத் தமிழரும் அறிஞர்கள் என்க:

அனைத்துத் தமிழரும் தலைவர்கள் என்க! தொண்டர் என்பவர் துண்டுக் கலைபவர்! துண்டுகள் நாலைந்து விழுந்ததும் தலைவரே! நாலைந்து துண்டுகள் விழுவதற் குள்ளே காலையும் கையையும் அசைப்பது தொண்டு! தொண்டு வாழ்க! தொண்டு வாழ்க! துண்டுக் கலையும் தொண்டு வாழ்க!

தமிழர் வாழ்க! தமிழும் வாழ்க! சிமிழா விழிகளும் திறந்த செவிகளும் அங்காந்த வாயும் அலைகின்ற கையுமாய் எங்கே எங்கே எங்கே என்றே இரவும் பகலும் எந்நே ரத்தும் , , வரவும் செலவுமாய் வாழ்கின்ற தமிழர்கள் அனைவரும் வாழ்க! அனைத்துத் தலைவரும் இணைய தமிழரால் என்றும் வாழ்கவே!

- 1972