பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153

இதுதான் தமிழ்நாடு! இவன்தான் தமிழன்'

இதுதான் தமிழ்நாடு; இவன்தான் தமிழன்! என்றென் றைக்கும் இவன் மாறான்! எறும்புமுன் னேறி யானையை வீழ்த்தும்; ஏணிவைத் தேற்றினும் இவன் ஏறான்! வெதுவெதுப் பாக - நாக்கடிப் பாக - வெற்றுரை ஆர்ப்பான்; வினை கானான்! வீணரைப் புரப்பான; கால்களில் வீழ்வான்; வெறுங்கை வீசுவான்; பழி நாணான் !

எண்ணிக் கொள்ளுங்கள்; இவன்தான் தமிழன்!

எவர்உணர்த் தாலும் இவன் உணரான்! எத்தனை நூறோ டாயிரம் ஆண்டுகள் ஏகினும் விரற்கடை இவன் வளரான்! பண்ணிக் கொள்ளுங்கள், மனத்தினில் உறுதி! பல்லிளிப் புக்கும் வழி நிற்பான் பாசம் பிடித்து மொழுக்கெனத் தேய்ந்தஓர் பழங்கா சுக்கும் தனை விற்பான்! -

எழுதிக் கொள்ளுங்கள்; இவன்தான் தமிழன்! எந்தநாட் டிலுமே இவன் கிடப்பான்! எச்சில் உண் டிக்கும் கழிகந் தலுக்கும் எவன்பின் னாலும் இவன் நடப்பான்! -- - புழுதியிற் கிடப்பான், புன்மைகள் நினையான்; பொய்மைக்கும் போலிக்கும் விலை தருவான்! புதுமைகள் பூக்கும்; புரட்சிகள் மலரும்; புதுவாழ் வமைத்திட.இவன் விரும்பான்!

- 1977