பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

  1. 56

கதவு திறந்தது!

கதவு திறந்தது:

கதிர்வான் எழுந்தது; கால் நடை கொண்டது, கடும்பணிக்கே! உதவும் உளங்கள். ஒன்றின; மீண்டும் உயிர்த்தேன் தமிழெனும் கண்மணிக்கே!

பழஞ்சுவர் இடிந்தது;

பாதை தெரிந்தது;

பம்பரக் கால்களும் சுழல் தொடங்கும்! இழந்தபல் காட்சிகள் இறவா நினைவுகள் இயங்கின; பகையோ போய் முடங்கும்!

கம்பிகள் தெறித்தன; விலங்குகள் கழன்றன! - காவல் நெருக்குகள் எனைவிலகும்! தும்பிகள் வந்தன; துந்துபி முழங்கின! தோலா முயற்சிகள் நடைஉலவும்!

வானம் அசைந்தது;

மரங்கள் எதிர்ந்தன: - வழிசுழன் றது:ஓ! நடக்கின்றேன்! மானம் நிமிர்ந்தது: மார்பும் விரிந்தது! மலை, வயல் வெளி ஆறு கடக்கின்றேன்!

கண்கள் மலர்ந்தன!

கைகள் அசைந்தன்! கருத்து மிதந்தன காற்றினிலே! பண்களுந் தமிழே. பாடலுந் தமிழே! பயில்நாடகம்உயிர் ஊற்றினிலே!

ஆண்டா நடந்தது:

அணுச்சிதை வில்லை! அடடா, உயிர், உளம் உடலினிலே!. பூண்டஎன் கோள்தலம்! புதுமைத் தோள் நல்ம்! புதுப்புது விளைவுகள் நடையினில்ே:

- 1977