பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

103

  1. 61

பழமையும் பேனான்; புதுமையும் கானான்; பரத்தைவாய் உரத்துடன் தரத்தையும் மிகுப்பான்! வழமையி தென்பான்; வாழ்விதென்றுரைப்பான்; வானத்து மீனுக்கு வடிவெலாம் புனைவான்! கிழமையும் புரவான் கிளைமையும் தழுவான்;. கீழ்மை யென்பதே குணமெனக் கிளத்துவான்! உழல்மெய் உறுப்பெலாம் அடிமைய்ோன் இவனை உலவஏன் விட்டனை ஒண்டமிழ்த் தாயே!

- 1979

எந்தத் ‘. . தலைமுறை - எழுந்துநிற் பானோ?

இந்தத் தமிழன் ஏமாளித் தமிழன்; இன்னுஞ் சொன்னால் கோமாளித் தமிழன்! சொந்தத் தமிழையும் படியான்; தன்னின் சொந்த இனத்தையும் மதியான்; இவனொரு மந்தத் தன்மையன், மழுங்கல் மதியன்; மானமும் நாணமும் அழுகிக் கிடப்பவன்; எந்தத் தலைமுறை எழுந்துநிற் பானோ? எவன்வந்து சொல்லி இவனைமீட் பானோ?

இந்தத் தமிழன் இளித்தவாய்த் தமிழன்; இன்னுஞ் சொன்னால் புளித்தவாய்த் தமிழன்! சந்துக்குச் சந்து தன்கொள்கை மாறுவான்! சடுதியில் ஒப்பியே பின்னதை மீறுவான்! குந்தித் தின்னும் வாய்ப்புக் கிடைத்தால் குடும்பம் முழுதுமே அடிமையாய் விற்பான்! எந்தத் தலைமுறை எழுந்துநிற் பானோ? எவன்வந்து சொல்லி இவனைமீட் பானோ? - 1979