பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TO

வந்து கூடுவீர் தமிழ் மக்காள்!

சாதிநிலை வேரறுத்துச் சமயநிலை சீர்திருத்திச் சமவுடைமைப் பொதுவுணர்வுக் கொள்கை செய்து, பாதியிலே மொழியிழந்து, படிப்படியாய்த் தாழ்வுற்றுப் பார்ப்பனியக் கோட்பாட்டுக்கடிமை யுற்றுப் பூழ்தியிலே நெளிபுழுவாய்ப் புன்மைநிலைத் தேரையதாய்ப் புலங்கிடக்கும் தமிழனிடைப் புழுங்கக் கூறி, வாழ்தியடா தமிழா, நீ என வாழ்த்துப் பாடுகின்ற நாளொன்றை வரவழைப்போம்; வருவீர் மக்காள்!

விழிப்பற்ற தூக்கத்தில் விலகலிலா மயக்கத்தில் விழுந்துருளும் தமிழனிடை விழிப்புண் டாக்கி, மொழிப்பற்றை உளம்புகுத்தி மூதறிவைப் புலம்பதித்து முழுவெழுச்சி கொளச்செய்து முன்னேற் றத்தின் வழிப் பற்றில் நடையூன்றி வாழ்க்கையிலே கைவிளங்கி வளங்கொழிக்கும் விடிவுலகம் வருவாய் என்றே கொழிப்புற்ற செந்தமிழில் குரல்கொடுப்போம்!

. . . . . (விறல்எடுப்போம்! குலைவின்றித் தமிழ் மக்காள் கூடுவீரே!

- 1980