பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

கணிச்சாறு இரண்டாம் தொகுதி

நலத்தை விரும்பி நயவஞ் சகமாய்க் குலத்தை வீழ்த்திடும் கோடரிக் காம்பு! அறத்தைப் பேசி ஆரியம் வளர்க்கும் திறத்தைக் கொண்ட திராவிடப் பிறழ்ச்சி!

அமைச்சுப் பதவியை ஆரியம் காத்திட நமைச்சல் மனத்தால் நல்விலை போக்கிய நல்ல வீடண நாயக உருவம்! - - - 'வல்ல 'சுக்ரிவ வழிவழி மரபு! 40 பெரியார் அண்ணா பெயர்களைச் சொல்லியே உரியவர் கொள்கையை உதைக்கும் பிரகலன்: மருளைத் தீர்க்கும் மதிதரும் புகழ்திருக் - குறளைப் பழிக்கும் குறளர் கைத்தடி! ஆரிய நச்சின் அளவறி யாத - சூரியக் கொழுந்து! தமிழ்திரி சுணங்கன்!

ஆயிரம் ஆயிரம் ஆண்டுக ளாக வாயுரம் கொண்டும் வஞ்சகம் காட்டியும் தமிழ்ப்பே ரினத்தைத் தாழ்த்தியும் வீழ்த்தியும் சமழ்ப்புச் செய்த சாத்திரக் குப்பையை - w 50 புராணப் புளுகை - வேதப் புரட்டினை - அராவிக் காட்டிய அறிஞரை யெல்லாம், தமிழினங் காத்த தலைவரை யெல்லாம், அமிழாத அவரின் அறிவுரை யெல்லாம், சூறை யாடிய சுழிமகன்! தமிழினக் கூரைமேல் திரியும் கொள்ளிக் குரங்கு! பெரியார் அண்ணா பேரினங் காக்க 'உரைத்தவை நச்சுகள் என்னும் உலுத்தனின்

கழுத்தில் சுற்றிய கருநாகப் பாம்பு! ‘. . . . . கொழுத்த நாக்குடை பார்ப்பனக் குறும்பறை! 60

- அத்தனைப் பெருமைகள் அனைத்தும் படைத்த

சித்தனை - காஞ்சிப் பெரியவாள் சீடனை -

நோக்கி இவ்வுரை நொந்து கூறுவோம்! போக்கினை மாற்றிக் கொள்ளுக! புதியஓர்