பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133;

201

நட்பும் பகையும்!

தம்மை முழுமையாய்த் தமிழ்க்குத் தருபவர் எம்மவர் ஆயினும் எதிர்ப்பவர் ஆயினும் எம்மூர் ஆயினும் எவ்வூர் ஆயினும் அம்மையும் அப்பனும் ஆவார், எமக்கு: அவரே நல்வழி காட்டியும் நமக்கு!"

எதையும் கருதாது இனத்திற் குழைப்பவர் புதியோர் ஆயினும் பழையோர் ஆயினும் முதியோர் ஆயினும் இளையோர் ஆயினும் விதையும் எருவும் ஆவார், எமக்கு வேந்தரும் தலைவரும் அவரே, நமக்கு!

நலன்கள் நாடாது நாட்டை மீட்டிடப் புலனும் உழைப்பும் பொழுதும் தருபவர், இலவோர் ஆயினும் எளியோர் ஆயினும் வலவரும் மறவரும் ஆவார், எமக்கு வாழ்க்கை நண்பரும் அவரே, நமக்கு!

தமிழ் இன, நாட்டினைத் தந்நலம் கருதி இமிழ்பகை கைக்கொள இரண்டகம் செய்வார் சிமிழ்தகைக் குன்றுடைச் செல்வரே. ஆயினும் உமிழ்தகு புல்லியர் ஆவார், எமக்கு!. ஒழிதகு பகைவரும் அவரே, நமக்கு!

- #986