பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135,

203

உவர்நிலத்து, உப்பல்லால், நெல் ஒருபோதும் விளைவு ஆகாதே!

பாதிப்பேர் தமிழி னத்தில் பகைமைக்குத் துணைபோ வோர்கள்! சாதிப்போர் கட்சிப் போரின் சழக்கினில் கால்வா சிப்பேர்! மீதிப்பே ரில்,பா திப்பேர் மெலுக்கென வாழ்ந்து சாவோர் : விதிப்போ ராட்டத் திற்கோர் விழுக்காடு வருவ(து) ஐயம்!

தமிழினத் தொண்டர் என்போர் தமிழாலே பிழைப்பைச் செய்வோர்! தமிழினத் தலைவர் என்போர் - தமிழின வணிகஞ் செய்வோர்! இமிழாமல் உழைப்பைத் தந்தே எந்தமிழ், இனம்,நாட் டிற்கே அமிழாத உணர்வால் தம்மை அளிப்பவர் எத்த னைப்பேர்?

இவர்தொகை, மிகமி கத்தான் எந்தமிழ், இனம், நா டுய்யும்:

அவரவர் நலத்திற் காக அயலவர்க் கடிமை செய்தே எவரெவர் வாழ்கின்றாரோ

இவர்தொகை குறைய வேண்டும்:

உவர்நிலத்(து) உப்பல் லால்,நெல் ஒருபோதும் விளைவா காதே!

- 1986