பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

飞7

239

எந்தமிழ் இனத்திற்கு இறுதி எச்சரிக்கை!

அழுதுஅழுது உள்ளம் அரற்றி அழுது தொழுது தொழுதுகை கூப்பித் தொழுது பொன்எனத் திகழ்ந்து புலமெலாம் பரவிய முன்வர லாற்றையும் முத்தமிழ்த் திறத்தையும் எடுத்தெடுத் தியம்பி எழுக எழுகென அடுத்தடுத் துரைத்தும்,எம் அருமைத் தமிழினம், படுத்தே கிடப்பது எனும்பாழ் உணர்வினால் மடுத்த செவியொடும் மங்கிய அறிவொடும் முடாத விழியொடும் முனகிய வாயொடும். ஆடாது அசையாது அரைஉயிர் கழன்று 10 சாகின்ற பிணம்போல் சாய்ந்து கிடப்பதை நோகின்ற நெஞ்சொடும் நொடித்த உணர்வொடும் எண்ணிப் பார்க்கிறோம்! எண்ணிப் பார்க்கிறோம்! மண்ணில் எம்மினம் மறைகின்ற காலமும் அதிர நடையிட்டு, அதோ அதோ மலைபோல் எதிர வந்ததே! இருள்புடை சூழ்ந்ததே!

இனியென் செய்குவோம்? இனியென் செய்குவோம்? தனியொரு சாக்குரல் தாழ ஒலித்தல்போல் இறுதிக் கூக்குரல் இறுதிஎச் சரிக்கை உறுதியாய் உரைக்கிறோம்! ஒலம் இடுகிறோம்! 20

ஓ!ஓ! தமிழரே! உடன்பிறந் தவர்களே! கூவும்என் குரலொலி கோடையின் இடிபோல் உம்செவி முட்டிவந் துறுத்த வில்லையோ? உம் உளத் துணர்வினை உலுக்க வில்லையோ?

எந்தமிழ் இனத்திற்கு இறுதிஎச்சரிக்கை:

செந்தமிழ் இக்கால் சிறிதுசிறி தாக -

அழிந்துகொண்டுள்ளதை அறிவரா, தமிழர்: கழிந்துகொண் டுளததன் கன்னித் தன்ம்ை: எந்தமிழ் மொழியை இம்மி இம்மியாய் இந்தியென் நாய்மொழி இழிவு ெ அழித்துக் கலைப்பதை அறிய வில்லையா? பழித்துச் சிதைப்பதைப் பார்க்க வில்லையா?

30