பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

கணிச்சாறு இரண்டாம் தொகுதி

தொலைக்காட்சி, வானொலி வடவர்க்கே சொந்தமா? இலையெச்சில் போல்இரண் டொன்று எங்கட்கா? மக்கள் வரியில் கால் போக்குக்கும் வரவுக்கும்! முக்கால் பங்கு முட்டாள் தனத்திற்கு! 100

அப்பப்பா எத்தனை ஆடம் பரங்கள் செப்புக் காசுக்கும் உதவாத செய்திக்கோ எத்தனை விழாக்கள்! எத்தனை வேடிக்கை! பித்தளைப் பயனுக்குத் தங்கப் பிதற்றல்கள்! கட்சிகள், மதங்கள், கடவுள், சாமிகள், ! நச்சு மனங்கட்கு-நாயனம்! மேளங்கள்!

உழவர், தொழிலாளர் ஒட்டிய வயிற்றுடன் - கழிசடை வாழ்க்கை காண்கையில், கொள்ளையில் உண்டு களித்தே உலாவரும் அமைச்சர்கள்! பெண்டு பிள்ளைக்குப் பெரும்பெரும் வளங்கள்!. 1 10

ஓ! இளை ஞர்களே ஒ: இளை ளுைகளே! கோயில், குளங்கள், கும்பிடும் சாமிகள், அறநிறு வனமெனும் ஆரவா. ரங்கள், துறவி மடங்கள், தொலையா மதங்கள், ! இன்னின்ன வகைக்கெலாம் இந்திய ஆட்சியில் பொன்னென்ன பொருளென்ன! பொழுதுக்கும்

w . . . . . - (விழாவென்ன!

மக்கள் என்பார்க்கு மண்ணுதான் உணவு: தக்க திட்டங்கள் தாள்களில் உரைகளில்! செயற்பா டெல்லாம் சிக்கல் பிக்கல்கள்! வயல்விளைவு வான்தொழில் வருவன யாவும் 120 அமைச்சர் களுக்கும் அதிகாரி களுக்கும்