பக்கம்:பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்கள் 2.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

16

தமிழ்த் திறம் பொறிப்போம்!

தனித்தமிழ் நாட்டினிற் கினி துழைப்போம் -செந் தமிழரைக் கூவியெம் முடன் அழைப்போம்! கணித்தமிழ் காத்தெங்கள் உயிர் பிழைப்போம்! - உளக் கனிவொடும் அறத்தொடும் குலந் தழைப்போம்!

பிறமொழி புகுத்திடும் வழி மறிப்போம் - இதைப் பித்தர்கள் எதிர்த்திடில் உடல் முறிப்போம்! பிறவழி அடிமையின் களை பறிப்போம் - நற் பீடுடைப் பழந்தமிழ்த் திறம் பொறிப்போம்!

பலபடத் திறம்படுங் கல்ை படிப்போம் - தமிழ்ப் பண்சிறக் கும்கூத் தியல் நடிப்போம்! . . . . . உலகியல் மொழிப்பயன் யாம் வடிப்போம் - இதற் கூறுசெய் வார்களின் உயிர் குடிப்போம்! :

சொல்லிலும் செயலிலும் ஒழுங் கினைப்போம்! -வளஞ் சோர்வுடை யாளரைச் சென் றனைப்போம்! . நல்லமைச் சாளர்கள் அர சமைப்போம் - அவர் நாட்டங்கள் யாவினும் பயன் சமைப்போம்!

- 1959