உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

100

திருக்குறள்

தமிழ் மரபுரை



நன்மை தராமையின் 'நன்றே தரினும்' என்பது எதிர்மறையும்மை. தன்னை மட்டுமன்றித் தன் எச்சத்தையுந் தாக்குமாதலின், 'அன்றே யொழிய விடல்' என்றார். 'விடல்' என்பது அல்லீற்று வியங்கோள்.

114. தக்கார் தகவில ரென்ப தவரவ

       ரெச்சத்தாற் காணப் படும்.

(இ-ரை.) தக்கார் தகவு இலர் என்பது - இவர் நேர்மை யுடையவர் அல்லது இல்லாதவர் என்னும் உண்மை; அவர் அவர் எச்சத்தால் காணப்படும் - அவரவருடைய மக்களால் அறியப்படும்.

தக்கார்க்கு நன்மக்களும் தகவிலார்க்குப் புன்மக்களும் பிறத்தல் இயல்பாதலின், 'அவரவர் எச்சத்தாற் காணப்படும்' என்றார். எச்சம் என்னும் சொல், மக்களின் வாழ்க்கை மட்டுமன்றிப் பெற்றோரின் முகத்தோற்றமும் குணவமைதியும் எஞ்சி நிற்பதைக் குறிக்கும். அதனால், மக்கள் என்னுஞ் சொல்லினும் தகுதியும் பொருட்பொலிவு முடையதாம்.

‘யோக்கியர்' என்னும் வடசொல் வழக்கூன்றியதால், தக்கார் என்னும் தமிழ்ச்சொல் வழக்கற்றதென அறிக.

115. கேடும் பெருக்கமு மில்லல்ல நெஞ்சத்துக்

       கோடாமை சான்றோர்க் கணி.

(இ-ரை.) கேடும் பெருக்கமும் இல் அல்ல - பழம் பிறப்பிற் செய்த தீவினையாற் கேடும் நல்வினையால் ஆக்கமும் ஏற்கெனவே எல்லார்க்கும் வகுக்கப்பட்டிருத்தலால், அவை இப் பிறப்பில் யார்க்கும் இல்லாதவை யல்ல; நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி - ஆதலால் இவ் வுண்மையறிந்து வரும் பிறப்பிலும் கேடு நேராதவாறு மனத்துக்கண் ஒருபாற் கோடாமை, அறிவுநிறைந்தோர்க்கு அழகாம்.

அறிவுநிறைந்தோரும் உண்மையறியாது நடுவிகந்தா மாக்கம் விரும்பி ஒருபாற் கோடுவராயின், தம் சிறப்பிழந்து பிறர்போலாவர் என்பது கருத்து.

116.கெடுவல்யா னென்ப தறிகதன் னெஞ்ச

      நடுவொரீஇ யல்ல செயின்.

(இ-ரை.) தன் நெஞ்சம் நடுவு ஒரீஇ அல்ல செயின் - ஒருவன் தன் மனம் நடுநிலை திறம்பித் தீயவற்றைச் செய்யக் கருதுமாயின்; யான் கெடுவல்