உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

104

திருக்குறள்

தமிழ் மரபுரை



123. செறிவறிந்து சீர்மை பயக்கு மறிவறிந்
தாற்றி னடங்கப் பெறின்.

(இ-ரை) அறிவு அறிந்து ஆற்றின் அடங்கப் பெறின் - ஒருவன் அறியத் தக்க நூல்களை யறிந்து இல்லறத்தின்கண் அடங்கி யொழுகுவானாயின்; செறிவு அறிந்து சீர்மை பயக்கும் - அவ் வடக்கம் பிறரால் அறியப்பட்டு அவனுக்குச் சிறந்த நன்மையை விளைவிக்கும்.

ஆற்றின் அடங்குதலாவது, பிறன் பொருளைக் கவராமையும் பிறன் மனைவியை விழையாமையும் பிறனைத் தனக்கு அடிப்படுத்தாமையுமாம்.

124. நிலையிற் றிரியா தடங்கியான் றோற்ற
மலையினு மாணப் பெரிது.

(இ-ரை.) நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் - இல்லறத்தின் கண் வழுவாது நின்று அடங்கினவனது உயர்ச்சி; மலையினும் மாணப் பெரிது -மலையுயர்ச்சியினும் மிகப் பெரிது.

மலை யென்பது வளமிகுந்ததாதலின், குடமலையும் பனி (இமய) மலையும் போல்வதாகும். உம்மை உயர்வுசிறப்பு. 'நிலையிற் றிரியா தடங்குதல் ஐம்புலவின்பமும் நுகர்ந்துகொண்டே அடங்கியொழுகுதல்.

125. எல்லார்க்கு நன்றாம் பணித லவருள்ளுஞ்
செல்வர்க்கே செல்வந் தகைத்து.

(இ-ரை.) பணிதல் எல்லார்க்கும் நன்றாம் - செருக்கின்றி யடங்குதல் எல்லார்க்கும் பொதுவாக நல்லதாம்; அவருள்ளும் செல்வர்க்கே செல்வந் தகைத்து - ஆயினும், அவ் வெல்லாருள்ளும் செல்வம் உடையவர்க்கே அது வேறொரு செல்வமாந் தன்மைத்தாகும்.

எல்லாராலும் மதிக்கப்படும் இயல்பும், எண்ணியதைச் செய்துமுடிக்குந்திறனும், ஒட்டோலக்கமாக (ஆடம்பரமாக வாழ்ந்தின்புறும் உயர்வும், இடம்பொரு ளேவலால் வரம்பிறந் தொழுகத் தூண்டும் நிலைமையும். உடைய செல்வரின் வாழ்க்கை அடக்கமுடைமைக்குப் பெரிதும் ஏற்காததாயிருப்பதால், அவரிடத்து அவ் வறம் அமைவது அவர்க்கு மற்றொரு