உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முகவுரை

xiii



7. சொற்பகுப்புத் தவறு

எ-டு: பெற்றத்தால் - பெற்ற வென்பதனுள் அகரமும், அதனா னென்பதனுள் அன்சாரியையும் தொடைநோக்கி விகாரத்தாற் றொக்கன.” (குறள். 524,உரை).

8. சொல் வரலாற்றுத் தவறு

எ-டு: அழுக்காறென்பது ஒரு சொல் - அச் சொற் பின்னழுக்காற்றைச் செய்யாமை யென்னும் பொருள்பட எதிர்மறை யாகாரமும் மகர வைகார விகுதியும் பெற்று அழுக்காறாமை யென நின்றது. (அழுக்காறாமை யதிகார முகவுரை).

9. சொற்பொருள் தவறு

எ-டு:இனிது = எளிது (குறள். 103).

10. அதிகாரப் பெயர் மாற்று

எ-டு: மக்கட் பேறு = புதல்வரைப் பெறுதல்

11. சுட்டு மரபறியாமை

எ-டு:“அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை யஃதும்” (குறள்.49)

அஃதும் = ஏனைத் துறவறமோ வெனின்:

12. இரு குறளைச் செயற்கையாக இணைத்தல்

எ-டு:631,632. இங்ஙனம் இவர் இந் நூற்கு ஆரியச் சார்பான உரை வரைந்திருப்பதற்கு. தமிழகப் பிராமணர் தொன்றுதொட்டுத் தமிழ் நூலாசிரியரும் நுவலாசிரியரும் உரையாசிரியருமாகி ஆரியக் கருத்துகளைத் தமிழிலக்கியத்திற் புகுத்தி, தமிழரை அடிமைப்படுத்தி யிருப்பதே அடிப்படைக் கரணியமாம்.

பரிமேலழக ருரையினும் இவ் வுரை திருந்தியுள்ள வகைகள்

1. உரைத்திருத்தம்

எ-டு: முற்றும் - குறள். 913

ஒரு மருங்கு - குறள். 1030

2. உரைவிளக்கம்

எ-டு: குறள். 235, 338

3. சொல்விளக்கம்

எ-டு: குறள். 127