பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறத்துப்பால் - இல்லறவியல் - பொறையுடைமை

115



அறத்துப்பால் - இல்லறவியல் - பொறையுடைமை 115

பெரிய ஆண்டகைமை அறம் மட்டுமோ; ஆன்ற ஒழுக்கு நிரம்பிய ஒழுக்கமுமாம்.

   புறப் பகைகளை வெல்வதினும் அகப் பகைகளை வெல்வதே அருமை யாதலின், அறுவகை உட்பகைகளுள் ஒன்றாகிய காமத்தை அடக்குவதைப் பேராண்மை என்றார். ஒன்றோ என்பது ஒன்றுதானே என்று பொருள்படுவதாம். பிறன்மனை நோக்காமை பிறர்க்குச் சிறந்த அறமாயினும் சான்றோர்க்கு இயல்பான ஒழுக்கம் என்பது கருத்து. எச்சவும்மை தொக்கது.

149. நலக்குரியார் யாரெனி னாமநீர் வைப்பிற்
பிறற்குரியா டோடோயா தார்.

(இ-ரை.) நாமநீர் வைப்பின் - அஞ்சத்தக்க கடலாற் சூழப்பட்ட நிலவுலகத்தின்கண்; நலக்கு உரியார் யார் எனின் - எல்லா நலங்களும் பெறுதற்குரியார் எவர் எனின்; பிறற்கு உரியாள் தோள் தோயாதார் - பிறனொருவனுக்குரியவளின் தோளைத் தழுவாதார்.

    நாமம் அச்சம். இஃது உரிச்சொல்., அகலம், ஆழம், தீயவுயிர்கள். கொந்தளிப்பு, நிலமுழுக்கு முதலியவற்றால் அஞ்சத்தக்கதாதலின், கடலை நாமநீர் என்றார். 'நலத்திற்கு' என்பது அத்துச்சாரியை தொக்கு நின்றது. தோள் தோய்தல்' இடக்கரடக்கல்.

150. அறன்வரையா னல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.

(இ-ரை.) அறன் வரையான் அல்ல செயினும் - ஒருவன் அறத்தைத் தனக்கு உரியதாகக் கொள்ளாது தீவினைகளைச் செய்து வருவானாயினும்; பிறன் வரையாள் பெண்மை நயவாமை நன்று - பிறனாட்சிக்குட்பட்டவளின் பெண்டன்மையை விரும்பாமையை அவன் மேற்கொள்ளின் அது அவனுக்கு நல்லதாம். இக் குணம் அவன் குற்றங்களை ஓரளவு மறைக்கும் என்பது கருத்து.

அதி.16- பொறையுடைமை

  அதாவது, தெரிந்தோ தெரியாமலோ பிறர் தமக்குச் செய்த சிறியவும் பெரியவுமான தீங்குகளை யெல்லாம் திருப்பிச் செய்யாதும், அவற்றிற்காக அவரைத் தண்டியாதும், பொறுத்துக் கொள்ளுதல், பெருங்குற்றமாயினும்