160
திருக்குறள்
தமிழ் மரபுரை
"அருளாள்வார்க்கு - அருளையுடையவருக்கு, அல்லல் - துன்பம்., இல்லை - எப்போதுமில்லை, (அதற்கு) வளி - (கனோகதி, கனவாத, தனுவாத மென்னும் மூன்று) மகா காற்றுகளால் சூழப்பெற்று, மல்லல் - வலிபொருந்தி, வழங்கும் - நிலைபெற்றிருக்கும், மா - பெரிய, ஞாலம் - உலகம், கரி - சாக்ஷி” என்பதாம்.
"இதன் கருத்து: வலிபொருந்திய மூன்று மகா காற்றுகளின் ஆதாரங்களால் நிலைபெற்றிருக்கும் உலகத்திற்கு அபாய மில்லாததுபோல, அருளை ஆளுகின்றவருக்கு யாதொரு துன்பமுமில்லை என்பதாம்." - திருக்குறள் ஆராய்ச்சியும் ஜைந சமய சித்தாந்த விளக்கமும், பக். 43 - 4.
"வளிமிகின் வலியு மில்லை" (புறம். 51) என்று ஐயூர் முடவனார் பாடியிருப்பதனால், சமணச் சார்பின்றியும் இத்தகைய வுரை கூறலாமென அறிக.
246. பொருணீங்கிப் பொச்சாந்தா ரென்ப ரருணீங்கி
யல்லவை செய்தொழுகு வார்.
(இ-ரை.) அருள் நீங்கி அல்லவை செய்து ஒழுகுவார் - உயிர்களிடத்து அருள் செய்யாது அதற்கு மாறான கொடுமைகளைச் செய்து ஒழுகுபவர்; பொருள் நீங்கிப் பொச்சாந்தார் என்பர் - முற்பிறப்பில் அறமாகிய உறுதிப் பொருளைத் தேடாது இப் பிறப்பிலும் அதை மறந்தவர் என்பர் அறிவுடையோர்.
247. அருளில்லார்க் கவ்வுலக மில்லை
பொருளில்லார்க்
கிவ்வுலக மில்லாகி யாங்கு
.
(இ-ரை.) பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல் ஆகிய ஆங்கு பொருட்செல்வம் இல்லாதவர்க்கு இவ்வுலக வின்பம் இல்லாததுபோல; அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை - அருட்செல்வம் இல்லாதவர்க்கு வீட்டுலக இன்பமில்லை. அவ்வுலகம் இவ்வுலகம் என்பன சேய்மையும் அண்மையும் வந்த பெயர்கள். உலகம் என்பது ஈரிடத்தும் ஆகுபெயர்.
248. பொருளற்றார் பூப்ப ரொருகா
லருளற்றா
ரற்றார்மற் றாத லரிது
.