பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அறத்துப்பால் - துறவறவியல் - கள்ளாமை

177


நேர்மையர். 'யாழ்கோடு' என்பதால் அம்பின் வடிவு நேர்மை வருவித் துரைக்கப்பட்டது. 'கொளல்' வியங்கோள்.

'யாழ்கோடு செவ்விது' என்றதை ஆராய்ச்சியில்லாரும் ஆரியப் பார்ப்பனரும் பிறழ வுணர்ந்து, இன்றுள்ள வீணை ஆரியர் கண்ட தென்றும், நால்வகை யாழுட் சிறந்த செங்கோட்டியாழும் வில்யாழ் வகையைச் சேர்ந்ததே யென்றும் உரைப்பாராயினர். யாழ்க்கோட்டின் வளைவு முழு வளைவும் கடைவளைவும் என இருதிறப்படும். வில்யாழ் முழு வளைவும் செங்கோட்டியாழ் கடைவளைவும் உடையன. கடைவளைவு வணர் எனப் பெயர் பெறும். அதையே வளைவெனக் குறித்தார் திருவள்ளுவர் என அறிக.

280. மழித்தலு நீட்டலும் வேண்டா வுலகம் பழித்த தொழித்து விடின்.

- (இ-ரை.) உலகம் பழித்தது ஒழித்து விடின் உயர்ந்தோர் தவத்திற் காகாதென்று தள்ளிய ஒழுக்கத்தை விட்டுவிடின்; மழித்தலும் நீட்டலும் வேண்டா - தலைமயிரை வறண்டலும் சடையாக்கலும் வேண்டுவதில்லை.

சமணர் கையாளும் பறித்தல் முறையும் மழித்தலுள் அடங்கும். மழித்தல் என்னும் வினையினால் தலைமயிர் என்னும் செயப்படுபொருள் உணரப்படும்.

"மனத்துக்கண் மாசில னாத லனைத்தறன்
ஆகுல நீர பிற

(34)

என்றதற் கேற்ப, கூடா வொழுக்க மில்லார்க்கு எவ்வகைப் புறக்கோலமும் வேண்டுவதில்லையென்பது இக்குறளாற் கூறப்பட்டது.

அதி. 29 - கள்ளாமை

அதாவது, பிறர் பொருளை மறைவாகக் கவராமை. இது கவர்தலும் மறைவிற் செய்தலுமாகிய இருமடிக் குற்றம். ஒரு தீவினையை ஆசையோடு கருதுதலும் அதைச் செய்தலோ டொக்குமாதலின், கள்ளாமை என்பது களவு செய்யாமையும் களவுசெயக் கருதாமையும் என இருதிறப்படும். களவு செய்யாமை இல்லறத்திலும் கடியப்படுவதே. ஆயின், துறவறம் தூய்மை நிலையில் இல்லறத்தினும் உயர்ந்ததாதலின், களவு செய்யக் கருதுதலும் அதிற்-