பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

4
ஊழியல்
அதி.38-ஊழ்

அதாவது, பழம்பிறப்புகளிற் செய்யப்பட்ட இருவினைப் பயன், செய்தவனையே செய்த முறைப்படி சென்றடையும் இயற்கை யொழுங்கு. இது முறைப்படி வருவதால் முறையென்றும் ஊழ் என்றும், அவரவர்க்குரிய இன்பதுன்பப் பகுதிகளை வகுப்பதால் பால் என்றும் வகுத்தான் என்றும், தெய்வ ஏற்பாடு போலிருப்பதால் தெய்வம் என்றும், பால்வரை தெய்வம் என்றும் பெயர் பெறும். இனி மாறாவியல்பா யிருப்பதால் இயற்கையென் றும் பெயர் பெறுவதாம்.

இது அறம்பொரு ளின்பம் மூன்றற்கும் பொதுவேனும், இருவினைப் பயனாயிருப்பதாலும், இனிமேலேனும் நல்லூழைத் தோற்றுவித்தற்கு இன்று முதல் நல்வினையே செய்க என்று ஏவும் வகையிலும், அறத்துப்பாலொடு சேர்க்கப்பட்டு, அதே சமையத்தில் பொருளோ டிதற்குள்ள நெருங்கிய தொடர்பை யுணர்த்தற்குப் பொருட்பாலின் முன்பும் துறவறவியலின் இறுதி யிலும் வைக்கப்ப பெற்றதென அறிக.

371. ஆகூழாற் றோன்று மசைவின்மை கைப்பொருள்
போகூழாற் றோன்று மடி.

(இ-ரை.) கைப்பொருள் ஆகுஊழால் அசைவின்மை தோன்றும் - ஒருவன் கையிற் பொருள் சேர்தற்குக் கரணகமான நல்லூழால் முயற்சி யுண்டாகும்; போகு ஊழால் மடி தோன்றும் - அவன் கையிலுள்ள பொருள் தீர்தற்குக் கரணகமான தீயூழாற் சோம்பலுண்டாகும்.

'ஆகூழ்', 'போகூழ்' என்னும் வினைத்தொகைகள் கரணகப் பொருளன. அசைவு சோம்பல், ஒருவனுக்குச் செல்வம் தன் முயற்சியாலும் வரும்;