பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

232

திருக்குறள்

தமிழ் மரபுரை



திருக்குறள்

அருஞ்சொற் பொருள் அகரவரிசை

(எண், குறள் எண்ணைக் குறிக்கும்)

அஃகாமை - சுருங்காமை 178 அஃகி - நுண்ணிதாய் 175 அகல் - அகன்ற 25 அகற்றும் - விரிவாக்கும் 372 அகனமர்ந்து - மனமகிழ்ந்து 84 அகன்ற - பரந்த 175 அகன்றார் - பெரியராயினார் 170 அசைவு - மடி 971 அஞ்சுவது - அஞ்சிக் காப்பது 366 அடக்கலாற்றின் - அடக்க

   வல்லனாயின்                        126

அடல் - வருத்துதல், கோறல் 206 அண்ணாத்தல் - வாய் திறத்தல் 255 அமர்ந்த - பொருந்திய 75 அமர்ந்து - மனமகிழ்ந்து 84 அமைகலா ஆறு - வருந்துகின்ற இயல்பு 219 அமைந்தின்று - அமைந்ததில்லை 340 அருங்கேடன் - கேடில்லாதவன் 210 அருளாட்சி - அருளாற் பயன் கோடல் 252 அருளாதான் - உயிர்கள் மாட்டு அருள்

    செய்யாதவன்                        249

அவம் - பயனில் முயற்சி 262 அவாம் - விரும்பும் 215 அவித்தான் - அறுத்தான் 6 அவ்வித்து - பொறாது 167 அவ்விய - பொறாமையுள்ள 189 அழீஇ - அழித்துச்சொல்லி 182 அழுக்கற்று - பொறாமைப்பட்டு 170 அழுக்கறுப்பான் - பொறாமைப்படுபவன் 163 அழுக்காறு - பிறராக்கம் பொறாமை 35 அளைஇ - கலந்து 91 அறத்தாறு - அறத்தின் பயன் 37 அறவாழி - அறக்கடல் 8 அறன்வரையான் - (ஒருவன்)

   அறத்தைத் தனக்கு உரித்தாகச்
   செய்யாது                              150

அறிவதில்லை - அறிந்ததில்லை 61 அறிவறிந்த -அறியவேண்டுவன

    அறிதற்குரிய                          61

அறுப்பான் - கெடுப்பான் 346 அற்கா - நில்லாத 333 அற்குப - நிலையுள்ள 333 அற்றேம் - இலமாயினேம் 88 ஆகலூழ் - நல்லூழ் 372 ஆகாவாம் - நில்லாவாம் 376 ஆகுலநீர - ஆரவார நீர்மைய 94 ஆகூழ் - ஆதற்குக் காரணமாகிய

  நல்லூழ்                               371

ஆக்கல் - வாழ்வித்தல் 264 ஆங்கால் - விளையுங்கால் 379 ஆட்சி - கையாளுதல் 252 ஆரா - ஒருகாலும் நிரம்பாத 370 ஆராவியற்கை - நிரம்பாத இயல்பு 370 ஆருயிர்- பெறுதற்கரிய மக்களுயிர் 73 ஆர்வம் - விருப்பம் 74 ஆர்வலர் - அன்புசெய்யப்பட்டார் 71 ஆறா - நெறியாக 161 ஆறு - பயன் 37 ஆற்ற - மிக 64 ஆற்ற - முழுதும் 367 ஆன்ற - நிரம்பிய 148 ஆன்று - நிறைந்து 365 இகவாவாம் - நீங்காவாம் 146 இசைபட - புகழுண்டாக 231 இடும்பை - துன்பங்கள் 4 இயலாள் - ஒழுகுபவள் 147 இயன்றது - நடந்தது 35