முன்னுரை
35
புதல்வரைப் பெறுதல் - அஃதாவது, இருபிறப்பாளர் மூவரானும் இயல்பாக விறுக்கப்படூஉங் கடன் மூன்றனுள், முனிவர்கடன் கேள்வியானும், தேவர் கடன் வேள்வியானும், தென்புலத்தார் கடன் புதல்வரைப் பெறுதலானு மல்லது இறுக்கப்படாமையின், அக் கடனிறுத்தற் பொருட்டு நன்மக்களைப் பெறுதல்.
(புதல்வரைப் பெறுத லதிகார முகவுரை)
மக்களென்னும் பெயர் பெண்ணொழித்து நின்றது.
(41)
பெண்ணியல்பாற் றானாக வறியாமையிற் 'கேட்டதா' யெனவுங் கூறினார்.
(46)
தீய சொற்களாவன........ வருணத்திற்கு உரியவல்லனவுமாம்.
(139)
இனி மனு முதலிய அறநூல்களால் பொதுவாகக் கூறப்பட்ட இல்லறங்களெல்லாம் இவர் தொகுத்துக் கூறிய இவற்றுள்ளே அடங்கும்.
"வேதமும் அறமும் அநாதி." (543)
பசுக்கள் பால்குன்றியவழி அவியின்மையானும், அது கொடுத்தற் குரியார் மந்திரங் கற்பமென்பன ஓதாமையானும், வேள்வி நடவாதாம்; ஆகவே, வானம் பெயலொல்லா தென்பதாயிற்று. (560)
தேவர்க்கும் அசுரர்க்கும் அமைச்சுப் பூண்ட வியாழ வெள்ளிகளது துணிவு தொகுத்துப் பின் நீதிநூலுடையார் கூறியவாறு கூறுகின்றமையின், ஈண்டு வினைத்தூய்மையும் உடன் கூறினார். (662)
"வேந்தன் மேய தீம்புன லுலகமும்" என்றார் பிறரும். நகுடனென் பான் இந்திரபதம் பெற்றுச் செல்கின்ற காலத்துப் பெற்ற களிப்பு மிகுதியான் அகத்தியன் வெகுள்வதோர் பிழைசெய, அதனாற் சாப மெய்தி அப்பதம் இடையே இழந்தானென்பதனை யுட்கொண்டு இவ்வாறு கூறினார். (899)
"பெண்பாலாக்கியது வடமொழி முறைமை பற்றி." (624)
வினைவயத்தாற் பஞ்சபூத பரிணாமமாகிய யாக்கையைப் பொருந்தி நின்று அதின் பயனனுபவித்தல் எல்லா வருணத்தார்க்கு மொத்தலிற் 'பிறப்பொக்கு மென்றும்.... கூறினார். (972)
"வடநூலார் அங்கமென்றமையின் 'உறுப்' பென்றார்”. (993)
காமத்துப்பால் -இது புணர்ச்சி பிரிவென விருவகைப்படும். ஏனை இருத்தல், இரங்கல், ஊட லென்பனவோவெனின், இவர் பொருட்பாகு-