உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 11.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

வடமொழி வரலாறு


-

இனி, உரம் = தழுவும் உறுப்பு என்றுமாம். உர்-உறு.

உறுதல் = பொருந்துதல், தழுவுதல்

ஒ.நோ: மரு (மருவு) - மார் - மார்பு - மார்பம்.

மருவுதல் = பொருந்துதல், தழுவுதல்.

வடவர் காட்டும் ரு (T)என்னும் மூலம் பொருந்தாமை காண்க.

உரு ருஹ் (இ.வே.)

உருவம்

உருத்தல் = முளைத்தல் (திவா.), தோன்றுதல்.

உரு - அரு - அரும்பு. அரும்புதல் = தோன்றுதல்.

ருஹ் ( = முளை, தளிர் (இ.வே.)

-

உரு உருத்து ருத் (rudh)

-

-

ருத் (rudh) = to sprout, shoot (இ.வே.)

-

ரூப (இ.வே.) rūpa.

உருத்தல் = தோன்றுதல். உரு = தோற்றம், வடிவம்,வடிவுடைப் பொருள், உடல். உரு - உருவு உருவம்.

உருவு - உருபு - வேற்றுமை வடிவம், அதைக் குறிக்கும் எழுத்து அல்லது அசை அல்லது சொல்.

ஒ.நோ: அளவு அளபு.

உருப்படி = உருவின்படி, தனிப்பொருள்.

உருப்போடுதல் = அக்கு, மணி முதலிய உருக்களை எண்ணி மந்திரம் ஓதுதல், அதுபோற் பன்முறை நவின்று (சொல்லி) மனப்பாடஞ் செய்தல்.

வேற்றுமை யுருபு என்பது, ஆரியர் வருகைக்குப் பல்லாயிரம் ஆண்டுகட்கு முந்திய தலைக்கழகக் காலத்திலேயே தோன்றிய தமிழிலக்கணக் குறியீடென வறிக.

rūpa என்னுஞ் சொல்லை rūp என்று குறுக்கி வினையாகவும் ஆள்வர் வடவர்.

உருத்திரம் - ருத்ர

உருத்தல் = 1. அழலுதல்.

66

'ஆக முருப்ப நூறி" (புறம். 25 : 10).

2. சினத்தல்.

"

"ஒள்வாட் டானை யுருத்தெழுந் தன்று" (பு. வெ. 3 : 2).

3. பெருஞ்சினங் கொள்ளுதல்.