உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 11.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழியதிகாரம்

151


"

“சிந்துர வாதித்த வித்தார முடையார்” (கந்தரந். 5).

4. புகர்முக யானை. 5. புளியமரம்.


புகர்முகம் (செம்புள்ளியுள்ள முகம்) என்பது சினையாகு பெயராய் யானையைக் குறிப்பது போன்றே, சிந்தூரம், சிந்துரம் என்னும் சொற்களும் யானையைக் குறிக்கும்.

சிந்தூரப்பொட்டு = குங்குமப்பொட்டு.

சிந்தம், சிந்தகம், சிந்துரம், சிந்தூரம் என்பன புளியின் செந்நிறம் பற்றிப் புளியமரத்தையுங் குறிக்கும்.

சிந்துரம் - சிந்திடீ (c), திந்திட = புளியமரம்

சிந்தூரித்தல் = தாதுக்களை (உலோகங்களை)ச் சிந்தூரமாக்கு தல். “சுருக்குக் கொடுத்ததைச் சிந்தூரித்து" (பணவிடு.230).

சிந்தூரி-சிந்துரி.

இவ் வினை வடிவங்கள் வடமொழியி லில்லை.

வடவர் காட்டும் மூலம் ஸ்யந்த் (அல்லது ஸ்யத்)=இயங்கு, ஒழுகு, பாய், ஓடு.

சென்னைப் ப.க.க. த. அ. சிந்தம் என்னும் தென்சொற்குச் சிஞ்ச்சா (cincā = புளியமரம்) என்பதை மூலமாகக் காட்டும்.

சில்லி

-

ஜில்லி (jh) = சிள்வண்டு

சில்லிடுதல்

=

ஒலித்தல். சில்லெனல் = உச்சமாகக் கூர்ந் தொலித்தல். “சில்லி சில்லென் றொல்லறாத" (திவ். பெரியதி. 1:7:9). சில் = சிள். சில் - சில்லி - சில்லிகை. சில் - சில்லை (பிங்.). சில்லுறு - சில்லூறு = சிள்வண்டு.

சில்லிகை - ஜில்லிகா (jh) = சிள்வண்டு.

சிவன்

-

சிவ

சிவத்தல் = செந்நிறமாயிருத்தல். சிவ-சிவம் - சிவன் = சிவந்தவன்.

சிவன் குறிஞ்சிநிலத் தெய்வமான சேயோன் கூறாதலால், சிவன் எனப் பெற்றான். அந்திவண்ணன், அழல்வண்ணன், செந்தீ வண்ணன், மாணிக்கக் கூத்தன் முதலிய பெயர்களை நோக்குக.

வடவர் சிவன் அழிப்புத் தொழில் திருமேனி என்று கொண்டு, சிவன் என்னும் சொற்குச் சீ (படு) என்பதை மூலமாகக் காட்டி, எல்லாப் பொருள்களும் ஒடுங்கும் இடமானவன் என்று பொருந்தப் பொய்த்தலாகப் பொருள் கூறுவர்.