உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 11.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழியதிகாரம்

165


சொம் - சொத்து. ஒ.நோ: தொகை = தொகுதி, செல்வம். ஸ்வாம் = சொத்து. தேவஸ்வாம் = தெய்வச் சொத்து, கோயிற் சொத்து.

ஸ்வாம் - ஸ்வாமி - ஸ்வாமின் = சொத்துக்காரன், ஆண்ை ஆண்டவன், தெய்வம்.

வடவர் ஸ்வாமின் என்னுஞ் சொல்லை ஸ்வ+மின் என் று பகுத்து, சொந்தக்காரன், உடையவன், உரிமையாளன், தலைவன், கணவன், அரசன், குரு, தெய்வப் படிமை என்று பொருள் தொடுப்பர்.

சொலவம் ச்லோக

-

சொல்

-

சொலவு

=

மரபுக் கூற்று, பழமொழி, பழமொழி

போன்ற செய்யுள் தொடர்.

சொலவு-சொலவம். சொலவு - சொலவடை.

வடமொழியில் முதல் வனப்பு (ஆதிகாவியம்) வான்மீகி இராமாயணம் என்பர். வான்மீகி முனிவர் காட்டில் ஒரு வேடனாற் கொல்லப்பட்ட பறவையைக் கண்டு வருந்தியபோது தம் முதற் செய்யுளைப் பாடியதால், வருத்தத்தைக் குறிக்கும் சோக(ம்) என்னும் சொல்லினின்று தனிச் செய்யுட்குச் ச்லோக என்று பெயருண் டாயிற்றென்று வடவர் கூறுவது மரபு. மா. வி. அ. இதை மறுத்துச் ச்ரு (கேள்) என்னும் சொல்லொடு தொடர்புகொண்டதா யிருக்கலாமென்று கருதுகின்றது.

சொலி ஜ்வல் (வே.)

சுல் - சுல்லி = அடுப்பு. சுள்ளெனல் = வெயில் சுடுதல். சுள் - சுள்ளை = மட்கலஞ் சுடுமிடம், காளவாய்.

-

சுல் - சொல் - சொலி. சொலித்தல் = எரிதல், ஒளிர்தல். சொல்-சொன் - சொன்னம் = தங்கம்.

சொல் = பொன்னிறமான நெல்.

"சடைச்செந்நெல் பொன்விளைக்கும்

ஒ.நோ: நில் - நிலா, நிலவு. நிற்றல் = விளங்குதல். நில் - நெல் = விளங்கும் பொன்போன்ற கூலம்.

சொன்னம் சுவர்ண

(நள. சுயம்வர. 68)

சொல் - சொன் - சொன்னம் = பொன் (திவா.).சொன்னகாரன்

= தட்டான் (பிங்.)

=

"சொன்னதானப் பயனெனச் சொல்லுவர்"

(கம்பரா. சிறப்பு)