உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 11.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மொழியியல் ஆராய்ச்சித்துறை மிகவும் விரிவும் ஆழமுமுடையதாதலால் பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்று அவற்றைக் கொண்டு நன்கு புரிந்துகொள்ளும் வகையில் மேலும் மொழியியல் ஆராய்ச்சி நூல்கள் வெளிவருதல் வேண்டுமென்று கருதினேம். அந்த நேரத்தில் திரு.தேவநேயனார் யாம் எதிர்பார்த்ததை ஏறத்தாழ முற்றும் நிறைவேற்றியது கண்டு பெரு மகிழ்வுற்றேம். அத்துறையில் அவர் மிகவும் உழைப் பெடுத்துஆராய்ந்து எழுதியிருப்பவற்றைத் தமிழ் அறிஞர்கள் நன்றாக நம்பலாம். சொல்லாராய்ச்சித் துறையில் திரு.தேவநேயனார் ஒப்பற்ற தனித் திறமை யுடையவர் என்றும் அவருக்கு ஒப்பாக இருப்பவர் அருமையாகும் என்றும் யாம் உண்மையாகவே கருதுகின்றேம்.

- தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகள்

தமிழ்மன்

சென்னை

குடிக்கட்டகை

017 600

‘பெரியார் குடில்’ பி.11. குல்மொகர் குடியிருப்பு,

35, செவாலியே சிவாசி கணேசன் சாலை, தியாகராயர்நகர், சென்னை - 17.