16
வடமொழி வரலாறு
இயங்கு இயக்கு - இயக்கம் = செலவு, அசைவு.
இய்எய்ஏஏகு. ஏகுதல் = செல்லுதல். ம. ஏகு, தெ.ஏகு (g).
ஒ.நோ : இயல் -எல். போ - போகு.
ஏலுதல் = இயலுதல் (கூடியதாதல்)
ஏயாயாத்திரை = செலவு. யா -ஜா-ஜாத்ரா (இ.).
ஒ.நோ: ஏன் - யான், ஏது - யாது, ஏமம் - யாமம், ஏனை - யானை.
ஜா என்னும் இந்தி வினை இறந்தகாலத்தில் கயா (gaya) என்றே புடைபெயரும்.
சகரம் ககரமாவது போல் ஜகரம் 'g' ஆகும். இந்திக்கு மூலமான சூரசேனியில் ஜா என்னும் இந்தி வினை ஏ அல்லது யா என்றே வழங்கியிருக்கலாம்.
தியூத்தானியத்தில் ஜா என்னும் போதல் வினை gā எனத் திரியும். OS., OE. gān, OHG. gān, gēn, E. go. ஆ ஓவாகத் திரிதல் தமிழிலுமுண்டு. எ-டு: பெரியார்- பெரியோர், ஆம்-ஓம்.
'ஒமோமென வோங்கிய தோர்சொல்"
(திருவாலவா.38:4)
தமிழில் யகரம் சகரமாகவும் சகரம் ககரமாகவும் திரிதல் போல், திரவிட மொழிகளிலும் வடநாட்டு மொழிகளிலும் ஆரிய மொழிகளிலும் யகரம் ஜகரமாகவும் ஜகரம் 'g' ஆகவும் திரிகின்றன. எ-டு: நெய்வு - நெசவு, செய் - (கெய்) - கை.
யமன் (வ.) - ஜமுடு (தெ.), யோகி (வ.) - ஜோகி (இ), யௌவன (வ.)- juvenis (L) ஜா -gā.
உய் என்னும் தமிழ்வினை வேத ஆரியத்தில் அய் என்று திரிந்து வழங்குகின்றது.
அய்-அயத்தே (ayate, இ. வே. i, 127: 3) = இயங்குகின்றான், செல்கின்றான்.
அய = செலவு, இயக்கம்.
அயன் = செலவு (வா.ஸ. XXII, 7), இயக்கம்.
அயனம் = இயக்கம், நடக்கை. சாலை, வழி (இ.வே.III, 33: 7). அயத்த, அயத்தம் = பாதம் (இ.வே. X 28: 10, 17).
இய் என்னும் தமிழ்வினை ஆரிய மொழிகளில்
குறுகி வழங்குகின்றது.
என்று