உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 11.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

வடமொழி வரலாறு


(1) இந்திய ஆரியம் (Indo-Aryan)

(2) ஐரேனியம்

(3) பாலத்திய சிலாவோனியம் (Baltic-Slavonic)

(4) அர்மீனியம்

(5) அல்பானியம்

(6) கிரேக்கம்

(7) இலத்தீனம்

(8) செலத்தியம் (Celtic)

(9) தியூத்தானியம் (அல்லது செருமானியம்)

(10) தொக்காரியம் (Tocharian)

(11) இத்தைத்தம் (Hittite)

இனி இவற்றொடு திரேசியம் (Thracian), பிரிகியம் (Phrygian) முதலிய வேறு அறு சிறு பிரிவுகளையும் சேர்த்துக் காட்டுவர் பேரா. பரோ. அவை அத்துணைச் சிறப்புடையனவல்ல.

இவற்றுள் முதன்முதலாக ஆரியம் எனப் பெயர் பெற்றது இந்திய ஆரியமே. இந்திய ஆரியருள் ஒரு கூட்டத்தார் மேற்கு நோக்கிப் பிரிந்து சென்று கீழைப் பாரசீகத்திற் குடியேறியபின், அவர் நாட்டிற்கு ஆரியா அல்லது ஆரியானா என்று பெயர் ஏற்பட்ட தாகத் தெரிகின்றது. ஆரியானா என்பது பின்னர் இரான் என மருவிற்று. இம் மரூஉவினின்றே ஐரேனியம் (Iranian) என்னும் மொழிப்பெயர் தோன்றியுள்ளது.

கி.பி. 1796-ல், வில்லியம் சோன்சு (William Jones) என்னும் ஆங்கிலேயர், கிரேக்க இலத்தீன செருமானிய கோதிய செலத்திய மொழிகட்கும் சமற்கிருதத்திற்கும் இடைப்பட்ட நெருங்கிய உறவைக் கண்டுபிடித்தார். அதினின்று செருமனியிற் சமற்கிருதக் கல்வி மிக ஊக்கமாய் மேற்கொள்ளப் பெற்றது. அதன் விளைவாகத் தோன்றிய பிரடெரிக்கு மாக்கசு முல்லர் (Friedrich Max Muller, 1823 - 1900) என்னும் செருமானிய மொழிநூற் பேரறிஞர், ஆரியம் என்னும் சொல்லைச் சமற்கிருதத்திற்கினமான ஐரோப்பிய மொழிகட்கும் பெயராக விரிவுபடுத்தினார். அதனால், ஆரியர் என்றொரு தனி மக்கட் பேரினம் இருப்பதாகவும் தவறான கருத்தெழுந்தது.

இன்றும் ஆரியம் என்னும் பெயர் ஒரு மொழிக் குடும் பத்தைப் பொதுவாகக் குறிப்பதுடன், இந்திய ஆரியத்தைத் தனிப்படச் சுட்டவுஞ் செய்யும். அதனால், தெளிவு நோக்கி, ஆரியமொழிக் குடும்பம் இந்திய ஐரோப்பியம் (Indo - European) அல்லது இந்திய - செருமானியம் (Indo - Germanic) என்று சொல்லப்பெறும்.

-

- MI