44
வடமொழி வரலாறு
(6)
ரெல்லை” (1336) எனத் தொல்காப்பியத்திற் குறிக்கப் பெற்றிருத்தல்.
ரண்டொரு தொல்காப்பிய இலக்கண வரம்பு கடைக் கழகச் செய்யுளிற் கைக்கொள்ளப் பெறாமை.
(7) தொல்காப்பியம் எழுத்தும் சொல்லும் பொருளும் ஆகிய மூவதிகாரங் கொண்டிருத்தலும், பாணினீயம் எழுத்தும் சொல்லுமாகிய ஈரதிகாரத்ததே யாதலும், ஆகவே முன்னதி னின்று பின்னதன்றிப் பின்னதினின்று முன்னது தோன்றற் கிடமின்மையும்.
தொல்காப்பியப் பொருளதிகாரம்
தன்னுட் கொண்டதாகும்.
யாப்பணிகளையும்
இன்னும் இதன் விரிவை என் தொல்காப்பிய விளக்கத்திற் கண்டுகொள்க.
12 . ஆரிய ஏமாற்று
வேதப் பிராமணர், தம் வெண்ணிறத்தையும் தம் முன்னோர் மொழியின் ஆரவார வொலியையும், தமிழ திரவிடரின் பழங்குடிப் பேதைமைகளையும் கொடைமடத்தையும் மதப் பித்தத்தையும், அளவிறந்து பயன்படுத்திக்கொண்டு, தம்மை நிலத்தேவராகவும் தம் முன்னோர் மொழியையும் தம் இலக்கியச் செயற்கை மொழியையும் தேவமொழியாகவும் காட்டி, அவற்றைப் பழங்குடி மக்கள் நம்புமாறு செய்துவிட்டனர். அதனால் தமிழ் கோயில்வழிபாட் டிற்கும் இருவகைச் சடங்குகட்கும் ஏற்காததென்று தள்ளப்பட்டு, சமற்கிருதமே அவ் வினைகட்குப் பிராமணரால் ஆளப்பெற்று வருகின்றது.
ஆரிய வேத மந்திரங்கள் பெரும்பாலும் ஆரிய மக்களால் இயற்றப்பட்டு அவர் பெயர்களைக் கொண்டிருக்கவும், அப் பெயர்கள் அம் மந்திரங்களைக் கண்டவர் பெயரேயன்றி இயற்றியவர் பெயரல்ல வென்றும், அம் மந்திரங்கள் ஒருவராலும் ஆக்கப்பெறாமல் இறைவன் போன்றே என்றுமுள்ளன வென்றும், இன்றும் ஏமாற்றி வருகின்றனர்.
வடமொழி யெழுத்தும் சொல்லும் இலக்கியமும் இலக்கணமும் பெரும்பாலும் தமிழைப் பின்பற்றி அமைந்திருக் கவும், வடமொழி வண்ணமாலையைக் குறிக்கும் பாணினீயத்