உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 11.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

47


1. பண்டை இந்திய ஆரியம் (Old Indo-Aryan)

(1) வேதமொழி

(2) சமற்கிருதம்

2. இடை

இந்திய ஆரியம் (Middle Indo-Aryan)

(1) பாளி

(2) செந்நிலை இலக்கியப் பிராகிருதம்

(Standard Literary Prakrit)

(3) அபப்பிரஞ்சம் (Apabhramsa)


3. இற்றை இந்திய ஆரியம் (Modern Indo-Aryan) மராத்தி, குசராத்தி, இந்தி, வங்காளம் முதலியன.

பர் (P.S.) சுப்பிரமணிய சாத்திரியார் இந்திய ஆரியத்தைப் பின்வருமாறு நானிலையாக வகுப்பர்.

1. வைதிக மொழி

2. இதிகாச மொழி (இராமாயண பாரத மொழி) 'இதனைப் பாணினியாசிரியர் பாஷா என்பர்; பதஞ்சலி முனிவர் லௌகிகீ என்பர்.”

3. பிராகிருதங்கள்

4. பிராகிருதச் சிதைவுகள்

இவை இந்தி, பஞ்சாபி, காசுமீரி முதலியன.

கீழையாரியமும் வடஇந்தியப் பிராகிருதமுஞ் சேர்ந்து வேத மொழியும், வேதமொழியும் தமிழுஞ் சேர்ந்து சமற்கிருதமும் அமைந்திருக்கவும், பெயரன் பாட்டனைப் பெற்றான் என்னும் முறையில் சமற்கிருதத்தினின்று பிராகிருதம் பிறந்ததென்னும் தலைகீழ் முடிபிற்கு உந்தப்படுவது, தமிழர் வெளிநாட்டினின்று வந்தவர் என்று கொள்ளும் அடிப்படைத் தவற்றினாலேயே.

(1) மராத்தி, குசராத்தி, இந்தி, வங்கம் முதலிய வடநாட்டு மொழிகளெல்லாம் சொல்லிலும் சொற்றொடரமைதியிலும் தமிழடிப்படை கொண்டவை யென்பதை, பி. தி. சீநிவாச ஐயங்கார் எழுதியுள்ள ‘இந்தியக் கற்காலம்' (Stone Age in India) என்னும் நூலிற் கண்டு தெளிக.

(2) தம்மம் (தர்ம), பொக்கரிணீ (புஷ்கரிணீ) எனப் பிரா கிருதத்திற் சிலபல வடசொற்கள் சிதைந்து வழங்கிய மட்டில், அவை வடமொழி வழிப்பட்டவை எனக் கொள்ளல் தகாது. தமிழிலும் சோத்தம் (ஸ்தோத்ர), திட்டாந்தம் (த்ருஷ்டாந்த) எனச் சில வடசொற்கள் இடைக்காலத்தில் திரிந்து வழங்கித்தான் இருக்