உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 11.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

வடமொழி வரலாறு


அத்தம் - அத்வன் ( னா)


அற்றம் - அத்தம் = ஆளில்லாத காடு, அருநெறி.

"ஆளி லத்த மாகிய காடே"

அத்தவனக் காடு என்பது உலக வழக்கு.

(புறம்.23)

ஆள் வழக்கற்ற காட்டுவழி என்னும் சிறப்புப் பொருளை இழந்து, வழி என்னும் பொதுப்பொருளையே அத்வன் என்னும் வடசொல் உணர்த்துகின்றது (அ.வே.).

அதி - அதி (ati, adhi)

அதித்தல் = வீங்குதல், பருத்தல், மிகுதல்.

"மதிநுட்ப நூலோ டுடையார்க் கதிநுட்பம்

யாவுள முன்னிற் பவை

""

(குறள்.636)

அதி + இகம் = அதிகம். அதி + அனம் = அதனம் = மிகுதி.

=

அதிகன் = 1. மிக்கோன்.

"பகைஞர்க் கெல்லா மதிகனாய்"

2. பரம்பொருள், இறைவன்.

"அதிகன் வேணியி லார்தரு கங்கையை”

அதிகர் = பெரியோர்.

"அதிகருக் கமுத மேந்தல்"

(பிரபோத. 26:110)

(கந்தபு. திருக்கயி. 20)

(சூடா.11:99)

அதி + அகம் = அதகம் அதகன்

-

=

வலிமையோன்.

"உறுதுயர் தீர்த்த வதகன்”

(திவ்.பெரியாழ். 2:1:9)

அதி - அதை. அதைத்தல் = வீங்குதல், செருக்குதல்.

அதி என்னும் வினை பிற்காலத்தில் வழக்கற்றது.

அதி என்பது வடமொழியில் முன்னொட்டாகிய இடைச் சொல்லேயன்றி வினைச்சொல்லன்று. அது இருவடிவிற் காட்டப் படினும் ஒரு சொல்லே.

-

அதிகாரம் அதிகார

அதி என்னுஞ் சொல் முற்கூறியதே.

-

கடுத்தல் = மிகுதல். கடு கடி - கரி. கரித்தல் = மிகுதல். உப்புக்

கரித்தல் என்னும் வழக்கை நோக்குக.